தமிழில் ரோஜா, மறுபடியும், பம்பாய், இந்திரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அரவிந்த்சாமி.1999ஆம் ஆண்டு வெளியான என் சுவாசக் காற்றே என்ற படத்திற்குப் பிறகு சாசனம் என்ற படத்தில் நடித்த இவர் நெடுங்காலம் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படம் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். இதையடுத்து ஜெயம் ரவியுடன் நடித்த தனி ஒருவன் இவருக்குச் சிறந்த வில்லன் நடிகருக்கான பெயரைப் பெற்றுத் தந்தது.
தற்போது இவரது நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல், சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, நரகாசூரன் ஆகிய படங்கள் உருவாகிவருகின்றன.
மேலும் மணிரத்னம் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் [ட்விட்டரில்](https://twitter.com/thearvindswami/status/941924425494122497) ரசிகர்களிடையே கலந்துரையாடிய அரவிந்த்சாமி ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.
அதில் மணிரத்னம் புதிய படம் பற்றி என்று ஒருவர் கேட்டதற்கு, நான் அதில் நடிக்கிறேன். பாஸுக்குப் பிடிக்காது என்பதால் எதுவும் கூற முடியாது என்று பதில் அளித்துள்ளார். மேலும் விரைவில் இயக்குநராகும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, ஆமாம் 2018ஆம் ஆண்டில் நடக்கும் என்று நம்புகிறேன் என்று தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் விரைவில் இயக்குநராகப் போகிறார் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
�,