n
தினப் பெட்டகம் – 10 (22.09.2018)
1. ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் மாதம் 22ம் தேதி, உலகம் முழுவதும் “வாகனங்களில்லா தினமாகக்” கொண்டாடப்படுகிறது.
2. நாம் அனுதினமும் பயன்படுத்தும் வாகனங்களுக்கும் எரிபொருளுக்கும் மாற்றாகவும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவும் இந்நாள் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
3. காற்று மாசுபாடு, நில மாசுபாடு மற்றும் நீர் மாசுபாடு ஆகியவற்றில் மிகவும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துவது, காற்று மாசுதான்.
4. சுற்றுச்சூழலில் இருக்கும் கார்பன் மோனாக்சைடில், ஏறத்தாழ 50%கும் அதிகாமாக வாகனங்களால் மட்டுமே ஏற்படுகிறது.
5.மேலும், நைட்ரஜன் ஆக்ஸைடின் அளவில் 35%கும் அதிகமாக வாகனங்களால் ஏற்படுகிறது.
6. உலகளவில் அதிகமான காற்று மாசுபாடுடைய நாடுகளில் ஒன்று, இந்தியா என்று உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மூலம் தெரிவித்துள்ளது.
7.இந்த அதிகப்படியான மாசுபாட்டால், இந்தியர்களின் வாழ்க்கை மூன்று ஆண்டுகள் குறைகிறது என்றும் தெரிவித்துள்ளது.
8.உலகில் மாசடைந்த 20 நகரங்கள் பட்டியலில், 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளன; மூன்று நமது அண்டை நாடான சீனாவில்..
9. காற்று மாசுபாட்டில் மிகவும் முக்கியமான வாயு, கரியமில வாயு. சுற்றுச்சூழலில் வெளியாகும் இந்த கரியமில வாயுவில், 30% அதிகமாக வாகனங்களில் இருன்ட்ஹே வருகிறது.
10. 2014ல் நடந்த ஒரு ஆய்வில், உலகில் எந்த நாடுகள் மாசுபாட்டை மிகக் கவனமாகவும் திறமையுடனும் கையாள்கிறார்கள் என்ற பட்டியலில் 178 நாடுகள் இடம்பெற்றன. அதில், 155வது இடத்தில் இருந்தது, இந்தியா!
-**ஆஸிஃபா**�,”