திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேற்று (மே 19) இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 6 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது.
அரவக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 63 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆகையால், அங்கு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நான்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன. மொத்தம் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துமாறு இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவின்படி மறுவாக்குப்பதிவும் நேற்று முடிந்தது.
சூலூர் தொகுதியில் 79.41 விழுக்காடு, அரவக்குறிச்சி தொகுதியில் 84.28 விழுக்காடு, திருப்பரங்குன்றம் தொகுதியில் 74.17 விழுக்காடு, ஓட்டப்பிடாரம் தொகுதியில் 72.61 விழுக்காடு ஆகிய விகிதங்களில் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாஹூ, “நான்கு தொகுதி இடைத் தேர்தல், மறுவாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகளில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.
அரவக்குறிச்சியில் சிறிய அளவில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்துவது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திலிருந்து எந்த தகவலும் வரவில்லை. சவால்களைத் தாண்டி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.
இதேபோல இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவும் நேற்று நிறைவடைந்தது. பிகார், இமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் சண்டிகர் மக்களவைத் தொகுதியிலும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இரவு 8 மணி வரையில் ஒட்டுமொத்தமாக 62.87 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. பிகாரில் 53.36 விழுக்காடு, இமாசலப் பிரதேசத்தில் 69.73 விழுக்காடு, மத்தியப் பிரதேசத்தில் 71.44 விழுக்காடு, பஞ்சாபில் 62.45 விழுக்காடு, உத்தரப் பிரதேசத்தில் 57.86 விழுக்காடு, மேற்கு வங்கத்தில் 73.51 விழுக்காடு, ஜார்கண்டில் 71.16 விழுக்காடு, சண்டிகரில் 63.57 விழுக்காடு ஆகிய விகிதங்களில் வாக்குகள் பதிவாகியுள்ளன.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
**
[வாக்கு கணிப்பு: பாஜகவுக்கு வெற்றியா?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/50)
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)
**
.
.�,”