அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதி இடைத்தேர்தல் 19ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதற்கான பிரச்சாரம் இன்றோடு (மே 17) முடிவடைகிறது. இதையடுத்து அந்தத் தொகுதிகளில் முகாமிட்டிருந்த தமிழகம் முழுவதிலுமிருந்தும் சென்றிருந்த அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சிகளின் பொறுப்பாளர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை திட்டமிட்டப்படி இந்த மூன்று கட்சிகளும் முடித்துவிட்ட நிலையில், அதிமுகவுக்கு கிடைத்த கடைசி கட்ட தகவலின்படி ஓட்டப்பிடாரம் மட்டுமே சாதகமாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது.
இதனால் நேற்று அவசர அவசரமாக அதிமுக தலைமையில் இருந்து இந்த நான்கு தொகுதிப் பொறுப்பாளர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் மக்களவைத் தேர்தல் போல சொதப்பி விடக்கூடாது என்று அதிமுக நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுவரை எவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கிறது, மற்ற கட்சிகள் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் பொறுப்பாளர்களிடம் கேட்டறிந்துள்ளது மேலிடம்.
அதையடுத்து அதிமுக சார்பில் நேற்று முதல் மீண்டும் இரண்டாம் கட்ட ரவுண்டு அதிரடியாக டெலிவரி செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக சூலூர், திருப்பரங்குன்றம் போன்ற தொகுதிகளில் நேற்று முதல் இரண்டாவது ரவுண்டு பண விநியோகம் அதிமுகவில் சூடுபிடித்துள்ளது. இன்று மாலை முதல் கூட்டம் தொகுதிகளுக்குள் வெகுவாகக் குறைந்துவிடும் என்பதால் அதற்குள்ளாகவே லோக்கல் நிர்வாகிகளை வைத்துக்கொண்டு பட்டுவாடாவை முடிக்க வேண்டுமென்று முடுக்கி விடப்பட்டுள்ளனர் அதிமுகவினர்.
குறிப்பாக தினகரன் கட்சியினர் கொடுக்கும் பணத்தை விட அதிகமாக கொடுக்க வேண்டும் என்று உத்தரவு அதிமுகவினருக்கு பறந்துள்ளதால், தினகரன் கட்சியினர் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்ற விவரங்களை நேற்றே கேட்டறிந்த அதிமுகவினர் அதற்கு ஏற்ற வகையில் தங்களது இரண்டாம் கட்ட டெலிவரியை முடிவு செய்தனர்.
அமமுகவும், அதிமுகவும் மாறி மாறி பணம் கொடுப்பதைப் பார்த்த வாக்காளர்கள், “நீங்க ரெண்டு பேரும் என்னைக்கும் இதேபோல தனித் தனி கட்சியாவே இருக்கோணும்” என்று சூலூரில் வெளிப்படையாகவே வாழ்த்தியிருக்கிறார்கள்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: சந்திரபாபு நாயுடு -துரைமுருகன் சந்திப்பு; ஸ்டாலின் நடத்திய விசாரணை!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/93)
**
.
**
[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/70)
**
.
**
[ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/26)
**
.
**
[இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/15/45)
**
.
**
[அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/15/72)
**
.
.�,”