அமெரிக்காவில் உள்ள பிளாக்ராக் என்ற உலக வர்த்தக நிறுவனத்தின் தலைமை அதிகாரி ரிக் ரிடேர், ஃபெடரல் ரிசர்வ் வங்கி இந்த நிதியாண்டு முடிவில் 4 மடங்கு வளர்ச்சியடையும் என்று கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இந்தத் தகவலை கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றபின்னர் நடைபெற்ற முதல் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் ஆலோசனைக் கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அமெரிக்க பொருளாதாரம் சீராக வளர்ச்சியடைவதாக தகவல் வெளியிடப்பட்டது. ஆனால் பிளாக்ராக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி இதுகுறித்துப் பேசுகையில், ‘தற்போது வளர்ச்சி மிக மந்தமாக இருக்கிறது. புதிய தலைமையின் திட்டங்கள் வளர்ச்சியை மேம்படுத்த உதவும். தற்போது ஊதியங்கள் மற்றும் பொருளாதார நிலை அதிகரித்துள்ளது. இந்த வருடம் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் 7 ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், அடுத்த கூட்டம் மார்ச் மாதம் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் நடைபெறும்’ என்று கூறினார்.
தற்போது நடைபெற்ற கூட்டத்தில் வரும் மார்ச் மாதம் அமெரிக்கப் பொருளாதாரம் 20 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சியடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரிக் ரிடேர் 50 சதவிகிதம் வளர்ச்சி கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.�,