lஃபெஃப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு!

Published On:

| By Balaji

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தேர்வாகியுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் (ஃபெஃப்சி) தலைவர், பொருளாளர், செயலாளர் ஆகிய பொறுப்புகளுக்கு மட்டும் இன்று (பிப்ரவரி 17) காலையில் தேர்தல் நடைபெற்றது. துணைத் தலைவர்களாக ஐந்து பேரும், இணைச் செயலாளர்களாக ஐந்து பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 10 பேருமே ஆர்.கே.செல்வமணியின் ஆதரவாளர்கள். மொத்தம் 65 வாக்காளர்களும் வாக்களித்த பிறகு உடனடியாகவே வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி 49 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

செல்வமணியை எதிர்த்து போட்டியிட்ட சுப்ரீம் சுந்தர் 15 வாக்குகள் மட்டுமே பெற்றார். பொருளாளர் பொறுப்புக்காக போட்டியிட்ட சுவாமிநாதன் 47 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுவாமிநாதனை எதிர்த்து போட்டியிட்ட சந்திரன் 18 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்தத் தேர்தலில் அனைத்து பொறுப்புகளுக்கான போட்டிகளிலும் இயக்குநர் செல்வமணியின் அணியினரே வெற்றி பெற்றுள்ளனர். ஆர்.கே.செல்வமணியின் அணியினர் 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தை நிர்வகிப்பர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share