சுங்கக்கட்டணத்தை முன்கூட்டியே அறிய உதவும் கூகுள் மேப்!

Published On:

| By admin

சுங்கச்சாவடி, சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டிய தகவல்களை முன்கூட்டியே அறியும் வசதியை கூகுள் மேப் விரைவில் அறிமுகப்படுத்துகிறது.
இதுகுறித்து கூகுள் மேப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சாலைகளில் வாகனங்களை ஒட்டிச் செல்லும்போது அடுத்து வரும் சுங்கச்சாவடியில் எவ்வளவு ரூபாய் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் போன்ற தகவல்களை முன்கூட்டியே அறியும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்துகிறோம். காரில் பயணிக்கும் பயணர்கள், புறப்படும் இடம் மற்றும் சென்று சேர வேண்டிய இடத்தை கூகுள் மேப்பில் குறிப்பிட்டால், சுங்கக் கட்டணம் எவ்வளவு என்ற விவரங்களைப் பெறலாம்.
உள்ளூர் சுங்கக் கட்டணம் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இவற்றை வழங்குகிறோம். கட்டணமில்லா வழிகளைக்கூட அடையாளம் கண்டு அதில் பயணிக்கவும் கூகுள் மேப்பின் புதிய அப்டேட் வழி செய்ய உள்ளது. இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த புதிய அம்சம் வெளியாகிறது” என்று தெரிவித்துள்ள கூகுள் மேப்பின் இந்த புதிய அம்சம் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு மேல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**- ராஜ்-**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share