Pகிச்சன் கீர்த்தனா: பிரெட் வடை!

Published On:

| By Balaji

�பிரெட் என்றாலே, ‘உடம்பு சரியில்லாதவங்க சாப்பிடறது’ என்கிற காலமெல்லாம் மலையேறி, ‘பிரெட் இன்றியமையாத உணவு’ என்பதாகிவிட்ட காலம் இது. அவசரத்துக்குக் கைகொடுக்கும் உணவாகிவிட்ட பிரெட்டைக்கொண்டு, இந்த மொறுமொறு பிரெட் வடையைச் செய்து அசத்துங்கள்; வீட்டிலுள்ளவர்களின் பாராட்டை அள்ளுங்கள்.

**என்ன தேவை?**

பிரெட் ஸ்லைஸ் – 4

பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய கேரட் – கால் கப்

பொடியாக நறுக்கிய பீன்ஸ் – கால் கப்

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

இஞ்சி (தோல் சீவி துருவியது) – ஒரு டீஸ்பூன்

அரிசி மாவு அல்லது கார்ன்ப்ளார் (சோள மாவு) – 3 டேபிள்ஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

**எப்படிச் செய்வது?**

பிரெட்டைச் சிறிய துண்டுகளாகப் பிய்த்துக்கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, இஞ்சி மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்து, கூடவே அரிசி மாவையும் சேர்த்து, கெட்டியான வடை மாவுப் பதத்துக்குக் கலந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி அதில் கலந்துவைத்த மாவை வடை போலத் தட்டிப்போட்டுப் பொரித்தெடுக்கவும்.

**குறிப்பு**

பிரெட்டில் அதிக உப்பு மறைந்திருப்பதால், இந்த வடையைச் சமைக்கும்போது உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

[நேற்றைய பதிவில்: சண்டே ஸ்பெஷல் – உடையாத முறுக்கும் உப்பாத தட்டையும்](https://minnambalam.com/k/2019/10/13/1/kitchen-keerthana-muruku-uppu-thattai)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share