qதோசையை விரும்பாதவர்கள்கூட, ஸ்வீட்கார்னை விரும்புவார்கள். குறிப்பாக ஸ்வீட் கார்ன் குழந்தைகளுக்கான ஃபேவரைட் எனலாம். விடுமுறை நேரங்களில் எதை செய்யலாம் என்று நினைப்பவர்கள் தோசை மாவுடன் ஸ்வீட் கார்னைச் சேர்த்து இந்தத் தோசையைச் செய்து அசத்தலாம்.
**என்ன தேவை?**
தோசை மாவு – 5 கரண்டி
ஸ்வீட் கார்ன் – ஒன்று
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
ஸ்வீட் கார்ன் முத்துகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து எடுத்துக்கொள்ளவும். அதை ஐந்து நிமிடங்கள் வேகவைத்து தண்ணீரை முழுவதுமாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அது சூடாக இருக்கும்போதே வெண்ணெய், சாட் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும்.
தோசைக்கல்லில் மாவை தோசையாக ஊற்றவும். அடுப்பைக் குறைவான தீயில் வைத்து தோசை மீது மசாலா கார்ன் தூவவும். மூடி போட்டு வேகவைக்கவும். தோசை வெந்தவுடன் பரிமாறவும்.
[நேற்றைய ரெசிப்பி: பீட்ரூட் தோசை](https://minnambalam.com/k/2019/12/23/4)�,