காலையில் சிற்றுண்டி சாப்பிட்டவுடன் சிலருக்குச் சூடாக ஒரு காபி குடித்தே ஆக வேண்டும். அதேபோல மதிய உணவு சாப்பிட்டு முடித்ததும் செரிமானத்துக்காகச் சிலர் டீ குடிப்பார்கள்.
உண்மையில் இது நல்லதல்ல. காபி, டீ இரண்டிலுமே ‘கஃபைன்’ என்கிற வேதிப்பொருள் இருக்கிறது. அது போதைப்பொருள் போலச் செயல்படக்கூடியது. சாப்பிட்டு முடித்ததும் உணவில் இருக்கின்ற சத்துகளை நம் உடல் கிரகிக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் டீ, காபி குடித்தால் அவற்றில் இருக்கின்ற கஃபைன், இந்தச் செயல்பாட்டைத் தடுத்துவிடும்.
உதாரணமாக, கீரையில் இரும்புச்சத்து நிறைய இருக்கிறது. கீரை சாப்பிட்டவுடன் டீயோ, காபியோ அருந்தினால், கீரையில் இருக்கின்ற இரும்புச்சத்து உடலில் சேராது. அதனால் சாப்பிட்டவுடனே டீ, காபி குடிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குறைந்தது இரண்டு மணி நேர இடைவெளியாவது இருக்க வேண்டும். அதிகாலை, மாலை நேரங்களில் டீ, காபி குடிப்பதில் பிரச்சினையில்லை. மற்ற நேரங்களில் தவிர்த்துவிடுவதே நல்லது.
**குளிர்பானங்கள்**
அசைவ உணவுடன் குளிர்பானங்கள் அருந்துவதும் தற்போது வாடிக்கையாகி வருகிறது. அசைவ உணவு உண்டதும் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். மேலும், செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தி, தூக்கமின்மை, உடல் அசதியை உண்டாக்கும்.
**எது சிறந்தது?**
மேலும் அசைவ உணவுடன் குளிர்ந்த தண்ணீர் அருந்துவதைத் தவிர்த்துவிடுங்கள். அதற்குப் பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
[நேற்றைய ரெசிப்பி: உருளைக்கிழங்கு ரவை ஸ்டிக்ஸ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/03/14/4)�,