�ஆரோக்கியமான உணவுப் பட்டியலில் கேரளாவில் செய்யப்படும் இந்த ஓலன் முக்கிய இடம் பிடிக்கும். கேரள விருந்தில் பிரதானமாக இடம்பிடிக்கும் தேங்காய்ப்பாலில் எளிய முறையில் செய்யப்படும் சுவையான மற்றும் சத்தான டிஷ் ஓலன். நீங்களும் செய்து உங்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு விருந்தளிக்கலாம்.
**என்ன தேவை?**
பூசணிக்காய் – கால் கிலோ (தோல் சீவி, பெரிய துண்டுகளாக்கவும்)
சிவப்பு காராமணி – கால் கப் (8 மணி நேரம் ஊறவைத்து, வேகவிடவும்)
பச்சை மிளகாய் – 2 (இரண்டாகக் கீறவும்)
முதல் தேங்காய்ப்பால் – அரை கப்
இரண்டாம் தேங்காய்ப்பால் – 2 கப்
தண்ணீர் – அரை கப்
உப்பு – தேவையான அளவு
**தாளிக்க:**
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கவும்)
காய்ந்த மிளகாய் – 2 (கிள்ளவும்)
**எப்படிச் செய்வது?**
பூசணித் துண்டுகளுடன் தண்ணீர், இரண்டாம் தேங்காய்ப்பால், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். அதனுடன் காராமணி சேர்த்துக் கிளறி இறக்கி, முதல் தேங்காய்ப்பாலை சேர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து பூசணிக் கலவையுடன் சேர்த்துப் பரிமாறவும்.
[நேற்றைய ரெசிப்பி: கேரள ஸ்பெஷல் – பழப் பிரதமன்](https://minnambalam.com/k/2020/08/24/1)�,