rகிச்சன் கீர்த்தனா: காய்கறி கோஃப்தா கிரேவி!

Published On:

| By Balaji

காய்கறிகள் உடலுக்கு மிகுதியான சத்தையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. ஆனால், அந்த காய்கறிகளைக் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பார்கள். ஆனால், அந்தக் காய்கறிகளை நறுக்கி, சற்று வித்தியாசமாக உருண்டை செய்து கோஃப்தா கிரேவி போல் செய்து கொடுத்தால், காய்கறி சாப்பிட பிடிக்காத குழந்தைகளும் கோஃப்தா சுவையை விரும்பி சாப்பிடுவர். அதற்கு இந்த காய்கறி கோஃப்தா கிரேவி உதவும்.

**என்ன தேவை?**

துருவிய முள்ளங்கி, கேரட், கோஸ் மற்றும் செளசெள (சேர்த்து) – ஒரு கப்

பிரெட் தூள் (பிரெட் க்ரம்ஸ்) – ஒரு கப்

பொட்டுக்கடலை மாவு – 2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்)

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

உருளைக்கிழங்குத் துருவல் – கால் கப் (வேகவிட வேண்டாம்)

உப்பு – தேவையான அளவு

**கிரேவிக்கு**

தக்காளி – 200 கிராம் (விழுதாக அரைக்கவும்)

மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

**தாளிக்க**

வெண்ணெய் – 3 டீஸ்பூன்

பட்டை – சிறிய துண்டு

கிராம்பு, ஏலக்காய் – தலா 2

சீரகம் – கால் டீஸ்பூன்

பொடித்த மிளகு – ஒரு சிட்டிகை

**பொரிக்க**

எண்ணெய் – தேவையான அளவு

மேலே தூவ

நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு

**எப்படிச் செய்வது?**

துருவிய காய்கள், உருளைக்கிழங்கு, பிரெட் தூள் மற்றும் மற்ற பொருட்களைச் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.

வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து கிரேவிக்குக் கொடுத்துள்ள தக்காளி விழுது, அரை கப் நீர் மற்றும் உப்பு, தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து, கொதித்து வருகையில் பொரித்த கோஃப்தாக்களைச் சேர்த்து 2- 3 நிமிடங்கள் கழித்து இறக்கவும். நறுக்கிய மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

[நேற்றைய ரெசிப்பி: **பனீர் கோஃப்தா கிரேவி**](https://minnambalam.com/public/2021/01/22/2/paneer-gravy)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share