zகொரோனாவால் களையிழந்த ஆற்றுகால் பொங்கல் விழா!

Published On:

| By Balaji

கொரோனாவால் களையிழந்து அமைதியாக நடந்தது கேரளா ஆற்றுகால் பொங்கல் விழா. இந்த ஆண்டு வீட்டுக்குள்ளேயே பொங்கலிட்டு பல லட்சம் பெண்கள் வழிபாடு நடத்தினர்.

கேரளாவில் ‘பெண்களின் சபரிமலை’ என்று அழைக்கப்படும் கோயில் திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதிகோயில். இக்கோயிலில் மாசி பௌர்ணமி பூரம் நட்சத்திரத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் 40லட்சம் பெண்கள் வீதியோரம் பொங்கல் படைத்து அம்மனுக்கு நேர்ச்சை செலுத்துவார்கள். இதனால் அனந்தபுரி மாநகராட்சி எங்கும் புகைமூட்டமாய் இருக்கும் .

கொரோனாவால் விட்டுக்குள்ளே இந்த ஆண்டு பொங்கலிட உத்தரவிடப்பட்டதால் கோயில் முன்பு ஒரு பிரதான அடுப்பில் சம்பிரதாய நிகழ்வாக பொங்கலிடப்பட்டது. அம்மாவின் பக்தர்கள் இன்று (பிப்ரவரி 27) தங்கள் வீடுகளிலேயே பொங்கலிட்டனர்.

கேரளாவில் தினம் தினம் அதிகரிக்கும் கொரோனாவுக்கு மத்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று சனிக்கிழமை புனித ஆற்றுகால் பொங்கலாவை, சரித்திரத்தில் முதல் முறையாக வீட்டில் பொங்கலிட்டு கொண்டாடினர்.

திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி கோவிலில் அமைக்கப்பட்டிருக்கும் முக்கிய பாரம்பரிய அடுப்பில் மட்டுமே கோயில் மேல்சாந்தி பொங்கலிட்டார். கோயிலில் காலை 10 50க்கு பூஜைகள் நடத்தி தீபம் ஏற்றி பொங்கலிடும் வைபோகம் நடைபெற்றது. விழாவில் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன், கலெக்டர் நவ்ஜோத் கோசா, எம்.பி. சசி தரூர், எம்.எல்.ஏக்கள் வி கே பிரசாந்த், ஓ ராஜகோபால், வி.எஸ்.சிவகுமார் மற்றும் கோயில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த பாரம்பரிய ‘பொங்கல்’ விழா ஆற்றுகால் பகவதி கோயில் விழாவின் ஒரு நல்ல சடங்காக கருதப்படுகிறது. பல லட்சம் பெண்கள் மாசி பௌர்ணமி பூரம் நாளில் பொங்கலிடும் இந்த வைபோகம் மிக முக்கியமான பக்தியின் வெளிப்பாடாக அமையும். கடந்த 1997இல் நடந்த பொங்கல் விழாவில் 17 லட்சம் பெண்கள் பொங்கலிட்டு, கின்னஸ் ரெக்கார்டு சாதனையாக அறிவிக்கப்பட்டது. 2004இல் 25 லட்சம் பெண்கள் பொங்கலிட்டது பழைய கின்னஸ் சாதனையை முறியடித்தது. கடந்த 2018ம் ஆண்டு 40 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு அனந்தபுரி மாநகரெங்கும் பொங்கலிட்ட இந்த மாபெரும் வைபோகம் இன்று கொரோனாவால் ஒருசம்பிரதாய சடங்காகவே மாறிப்போய் பக்தர்கள் வீட்டுக்குள் பொங்கலிடும் நிகழ்வாகிப் போயிருந்தது.

**-சக்தி பரமசிவன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share