dகிச்சன் கீர்த்தனா: கேழ்வரகுப் புட்டு

Published On:

| By Balaji

“உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கு. சாப்பாட்டுல எண்ணெய் சேர்த்துக்காதீங்க. வாயு, அஜீரணப் பிரச்சினை இருக்கு. மிதமா, ஆவியில வேகவெச்ச உணவா சாப்பிடுங்க” என டாக்டர்கள் அட்வைஸ் செய்யும்போது, இட்லி, இடியாப்பம் தவிர, வேறு என்ன சாப்பிடுவது என்று யோசிப்போம். இருக்கவே இருக்கு, எண்ணெய் அதிகம் சேர்க்காத, ஆவியில் வேகவைத்த புட்டு.

**என்ன தேவை?**

கேழ்வரகு மாவு – 2 கப்

துருவிய வெல்லம் – ஒரு கப்

ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

உடைத்த முந்திரித் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன்

தேங்காய்த் துருவல் – கால் கப்

நெய் – 4 டேபிள்ஸ்பூன்

**எப்படிச் செய்வது?**

வெறும் வாணலியில் கேழ்வரகு மாவைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வெந்ததும் லேசாக ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். வெல்லத்துடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து பிசுக்குப் பதத்தில் பாகு வைத்து இறக்கவும். அதனுடன் வேகவைத்து உதிர்த்த கேழ்வரகு மாவு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். முந்திரியை நெய்யில் வறுத்து, நெய்யுடன் இதில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

**[சண்டே ஸ்பெஷல் – பூச்சிகளுக்கு நோ என்ட்ரி சொல்வோம்!](https://minnambalam.com/health/2021/02/07/2/House-protection-from-bugs-and-insects)**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share