வரலாற்றின் பக்கங்களைப் பெருமைகளைத் தேடியும், உண்மைகளைத் தேடியும் மனிதக்கூட்டம் அலைந்துகொண்டிருக்கும்போது, தனது உடலைச் சிலிர்த்து உள்ளிருக்கும் பொருட்களுக்கு வழிகாட்டி வரலாற்றின் தொன்மையை நமக்குப் படமாகக் காட்டிவிடுகிறது இந்த பூவுலகம்.
இன்றைய நிகழ்வுகளே நாளைய வரலாறாகிறது என்பது உண்மைதான் என்றாலும், அவற்றைத் தான் வரலாற்றுப் புத்தகங்களின் அடுத்தடுத்த பக்கங்களில் எழுதுகிறோம் என்றாலும், அதில் அடிஷனலாக பக்கங்களை இணைக்க வைக்கும் சக்தி இயற்கைக்கே உரியது. அப்படித்தான், சங்ககாலத் தமிழர்களின் வாழ்வியலை கீழடியில் சுட்டிக்காட்டியிருக்கிறது தமிழ் மண்.
தோண்டத் தோண்ட ஆச்சரியங்களைக் கொடுத்துவரும் கீழடி மண்ணில், சிதைந்து போயிருந்தாலும் கம்பீரமாக தனது எலும்புகளின் மூலம் வரலாற்றைப் பதியவைத்துச் சென்றிருக்கிறது ஒரு காளை. வலுவான அதன் எலும்புகளும், அந்த எலும்புகள் அமைந்திருந்த விதமும் தமிழகத்தின் தொன்மை குறித்த பல கதவுகளை முட்டி மோதித் திறந்திருக்கிறது. அந்தக் கதவுகளின் வழி நமக்குத் தெரியும் உலகம் எத்தகையது என்பதை சாதாரண கண்களால் புரிந்துகொள்வது சிரமம். வரலாறும், இலக்கியமும், கற்றலும் கொடுத்த அறிவின் அடிப்படையில் தொடர்ந்து பல ஆய்வுகளைச் செய்துவரும் சிந்து சமவெளி ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களிடம், கீழடியில் நடைபெற்ற அகழ்வாய்வின்போது கிடைத்த ‘திமில் காளை’யின் எலும்புகள் குறித்த விளக்கங்களை மின்னம்பலம் வாசகர்களுக்காகக் கேட்டறிந்தோம். அந்த வீடியோ உங்களுக்காக…
�,”