சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்தத் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு 3 நடிகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மஞ்சு வாரியர், ஜோதிகா அல்லது கீர்த்தி சுரேஷ் ஆகிய மூவரில் யாரை இந்தப் படத்திற்கு செலெக்ட் செய்யப்போகிறார்கள் என ரசிகர்கள் காத்திருந்த சமயத்தில், கீர்த்தி சுரேஷை தேர்ந்தெடுத்து ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது படக்குழு.
தேசிய விருது பெற்ற நடிகையாக கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் உயர்ந்திருந்ததால், அவரை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே போனது. வழக்கமாக நடிகைகளுக்குக் கொடுக்கப்படும் ரோல் போல அல்லாமல் உண்மையாகவே கதைக்குத் தேவையான கேரக்டராக இருந்தால் மட்டுமே நடிப்பதாக கீர்த்தி சுரேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட, முழு கதை மற்றும் கேரக்டரை விளக்கியிருக்கிறார் இயக்குநர் சிவா. அதன்பிறகே கீர்த்தி சுரேஷ் இந்தப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
“என் வாழ்க்கையில் நடைபெறும் மாயாஜாலம் போல இதை உணர்கிறேன். ரஜினியை வியந்து பார்த்த நான், இப்போது அவருடன் ஸ்கிரீனில் நடிக்கப்போகிறேன் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் வாழ்க்கையின் முக்கியமான நினைவாக இது இருக்கும்” என்று ட்விட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
#KeerthyInThalaivar168@rajinikanth @KeerthyOfficial @directorsiva #Thalaivar168 pic.twitter.com/tNPBSxVEB8
— Sun Pictures (@sunpictures) December 9, 2019
�,”