சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் முத்தையா முரளிதரன் ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை வந்தார். இந்நிலையில் நேற்றிரவு திடீரென உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், முத்தையா முரளிதரனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நேற்றிரவு இதய பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெற்றிகரமாக ஆஞ்ஜியோ செய்யப்பட்டு ஆஞ்ஜியோ பிளாஸ்ட் மூலம் ஸ்டென்ட் பொறுத்தப்பட்டது.
மூத்த இருதய சிகிச்சை நிபுணர் செங்கோட்டுவேலன் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நலமாக இருக்கும் முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இனி அவர் தனது இயல்பான பணிகளை தொடரலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**வினிதா**
�,