�செட்டிநாட்டு சமையலுக்குப் பெருமை சேர்க்கும் ஆப்பம், இடியாப்பம், கந்தரப்பம், ஐந்தரிசி பணியாரம் போன்ற உணவு வகைகளுடன் பாயசத்துக்கும் முக்கிய இடமுண்டு. அவற்றில் இந்த கவுனி அரிசி பாயசத்துக்குத் தனி சிறப்புண்டு. ‘இன்னும் கொஞ்சம்… இன்னும் கொஞ்சம்’ எனக் கேட்டுச் சாப்பிட வைக்கும் இந்த பாயசத்தை, நீங்களும் செய்து வீட்டிலுள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம்.
**என்ன தேவை? **
கவுனி அரிசி – அரை உழக்கு
பால் – ஒரு லிட்டர்
சர்க்கரை – ஓர் உழக்கு
ஏலக்காய் – 5
நெய் – சிறிதளவு
முந்திரி – 10
தேங்காய்த்துருவல் – ஒரு கப்
**எப்படிச் செய்வது? **
நெய்யில் முந்திரியை வறுத்துக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும். கவுனி அரிசியை ரவையாக உடைத்துக்கொள்ளவும். குக்கரில் ரவையைப் போட்டு நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைக்கவும். நன்றாக கரண்டியால் மசிக்கவும். பிறகு பாலை ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து நன்றாகக் கொதிக்க விடவும். நன்கு கொதித்தபின் சர்க்கரையைப் போட்டு கிளறி கரைந்ததும் வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காய், தேங்காய்த்துருவல் சேர்த்துப் பரிமாறவும்.
[நேற்றைய ரெசிப்பி: முருங்கைக்காய் மசாலா](https://minnambalam.com/entertainment/2021/01/29/2/kitchen-keerthana)�,