செட்டிநாட்டு விருந்துகளில் ஏதோ ஒரு விதத்தில் கவுனி அரிசியைப் பயன்படுத்துவார்கள். இந்த அரிசியில் செய்யப்படும் பொங்கல் போன்றே இனிப்பான அல்வாவும் செய்து ருசிக்கலாம்.
**எப்படிச் செய்வது?**
அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு நெய்விட்டு, சூடானதும் தேவைக்கேற்ப முந்திரி, திராட்சையைச் சேர்த்து வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். அதே வாணலியில் ஒரு கப் கவுனி அரிசி மாவு, இரண்டு டேபிள்ஸ்பூன் கோதுமை மாவை வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒரு கப் வெல்லம், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வெல்லத்தைக் கரையவிடவும். பிறகு, வடிகட்டி தனியாக வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வறுத்த கவுனி அரிசி மாவு, கோதுமை மாவு, பால், வெல்லக்கரைசல், அரை கப் சர்க்கரை சேர்க்காத கோவாவைச் சேர்த்து கைவிடாமல் கிளறவும். இடையிடையே நெய்விட்டு கிளறவும். கலவை வாணலியில் ஒட்டாமல் வரும்வரை கிளறி இறக்கி முந்திரி, திராட்சை, பாதாம் தூவி பரிமாறவும்.
**சிறப்பு**
கவுனி அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமான பிரச்சினை மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும். மேலும் இரும்புச்சத்தும் இருப்பதால் நரம்புகளுக்கும் வலுவைக் கொடுக்கும்.
�,