ரிலாக்ஸ் டைம்: காஷ்மீரி பிர்னி!

public

காஷ்மீர் மக்கள் இறைச்சிகளை விரும்பி உண்பார்கள். குறிப்பாக, மட்டனால் செய்யப்படும் ரோகன் ஜோஷ், கலியா, சோக் சர்வான், கபர்காஹ், மீனால் செய்யப்படும் டோய் மச், பாலைப் பயன்படுத்தி செய்யக்கூடிய கல்ஹாரி குல்ச்சா மிகவும் பிரபலம். அப்படிப்பட்ட ஒன்றுதான் இந்த காஷ்மீரி பிர்னி.

**எப்படிச் செய்வது?**

அரை கப் பாசுமதி அரிசியைக் கழுவி, தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு சிட்டிகை குங்குமப்பூவை இரண்டு டேபிள்ஸ்பூன் பாலில் ஊறவைக்கவும். அரிசியைத் தண்ணீர் வடித்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்து பாத்திரத்தில் போட்டு வைக்கவும். அடிகனமான கடாயில் ஒருகப் பாலைச் சூடாக்கி, குமிழ்கள் வந்ததும் தீயைக் குறைக்கவும். அத்துடன் அரிசி மாவு, ஒரு கப் கண்டன்ஸ்டு மில்க், குங்குமப்பூ கலவை, கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள், ஒரு டேபிள்ஸ்பூன் நறுக்கிய பாதாம், ஒரு டேபிள்ஸ்பூன் பிஸ்தா சேர்த்து, கலவை கெட்டியாக ஆரம்பிக்கும்வரை அடிக்கடி கிளறிவிடவும். இதனுடன் ஒரு டேபிள் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும் (ருசி பார்த்து சர்க்கரையின் அளவை அட்ஜஸ்ட் செய்வது நல்லது). சர்க்கரை கரைந்து, அரிசி நன்கு வெந்ததும் பிர்னி தயார். சிறிது நேரம் ஆறியதும் மண் பாண்டத்தில் பிர்னியைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். நறுக்கிய நட்ஸ், குங்குமப்பூ சேர்த்து அலங்கரித்து, ஜில்லென்று பரிமாறவும்.

**சிறப்பு**

சத்துகள் நிறைந்த இந்த பிர்னி அனைவருக்கும் ஏற்றது. குழந்தைகள் பசி என்று வரும் நேரத்தில் கொடுத்தால் உடனடி ஆற்றல் பெறுவார்கள்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *