Yரிலாக்ஸ் டைம்: கருப்பட்டி பாயசம்!

Published On:

| By Balaji

o

காபி டீயில் சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டி சேர்த்து அருந்துவது தற்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் காபி, டீக்கு பதில் ரிலாக்ஸ் டைமில் இந்த கருப்பட்டி பாயசம் அருந்தி உடனடி புத்துணர்ச்சி பெறலாம்.

**எப்படிச் செய்வது?**

இரண்டு கப் கருப்பட்டித் துருவலைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்து, காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். 50 கிராம் ஜவ்வரிசியை வேகவைத்துக் கொள்ளவும். 50 கிராம் சேமியாவை ஒரு டீஸ்பூன் நெய்யில் இளஞ்சிவப்பாக வறுத்து வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் அடிகனமான பாத்திரத்தில் ஜவ்வரிசி, சேமியா, மூன்று கப் பால் சேர்த்து சிறு தீயில் 10 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும். பிறகு, கருப்பட்டிக் கரைசலைச் சேர்த்து நன்கு கிளறவும். இரண்டு டேபிள்ஸ்பூன் நெய்யைச் சூடாக்கி 15 முந்திரிப்பருப்பு, 10 உலர் திராட்சை, அரை டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து வறுத்து பாயசத்தில் சேர்த்து நன்கு கிளறிப் பரிமாறவும்.

குறிப்பு: அடுப்பில் இருக்கும்போது கருப்பட்டி கரைசல் சேர்க்கக் கூடாது. திரிந்துவிடும்.

**சிறப்பு**

இந்த பாயசத்தில் சுண்ணாம்புச் சத்து அதிகமிருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share