தற்போதைய மழை – குளிர்கால சூழ்நிலையில் தொண்டைக்கு இதமாகவும், சளிக்கு மருந்தாகவும் இருக்கும் இந்த கற்பூரவல்லி தேநீர், அனைவருக்கும் ஏற்றது. உடனடி புத்துணர்ச்சி தருவது.
**எப்படிச் செய்வது?**
ஒரு கைப்பிடி கற்பூரவல்லி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் நறுக்கிய கற்பூரவல்லி இலைகள், ஒரு டீஸ்பூன் துருவிய இஞ்சி, ஒன்றரை டீஸ்பூன் டீத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதித்ததும் வடிகட்டி அத்துடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து பருகவும்.
**சிறப்பு**
மன அழுத்தத்தைக் குறைக்கும் இந்தத் தேநீர், சிறுநீரை எளிதில் வெளிக்கொணரவும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தவும் உதவும்.
�,