பார்க்கும்போதே நாவின் சுவை நரம்புகளைத் தூண்டி, உடனடியாக சாப்பிட்டுவிட வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தும் உணவு வகைகளில் பஜ்ஜிக்கு தனி இடம் உண்டு. மழைக்காலத்தில் பஜ்ஜி சாப்பிட வேண்டும் ஆசை அதிகமிருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் இந்த கற்பூரவள்ளி பஜ்ஜி செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
**எப்படிச் செய்வது?**
75 கிராம் கடலை மாவு, 15 கிராம் அரிசி மாவு, அரை டீஸ்பூன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள், ஒரு சிட்டிகை சமையல் சோடா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துக் கலக்கவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய் சேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். சுத்தம் செய்து காம்பு நீக்கிய கற்பூரவள்ளி இலைகளை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
**சிறப்பு**
மழைக்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து உடனடியாக நிவாரணம் பெறலாம்.
�,