Gரிலாக்ஸ் டைம்: காராமணி வடை!

Published On:

| By Balaji

உடல் சோர்வினை நீக்கி உடனடியாக சக்தி தரும் உணவு வகைகளில் காராமணி முக்கிய இடம் வகிக்கிறது. ரிலாக்ஸ் டைமில் சோர்வாக உணர்கிறவர்கள் இந்த மொறுமொறுப்பான காராமணி வடை செய்து சாப்பிட்டு உடனடி புத்துணர்ச்சி பெறலாம்.

**எப்படிச் செய்வது?**

ஒரு கப் உலர்ந்த வெள்ளைக் காராமணியை மூன்று மணி நேரம் நீரில் ஊறவிடவும். பிறகு கைகளால் தேய்த்து மீண்டும் நீர்விட்டுக் கழுவினால் மேல் தோல் நீங்கிவிடும். தோல் நீங்கிய காராமணியுடன் தேவையான அளவு உப்பு, இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக, கெட்டியாக அரைக்கவும். இதனுடன் நான்கு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு, அரை டீஸ்பூன் இஞ்சித் துருவல், அரை டீஸ்பூன் மிளகுத்தூள், அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள், நறுக்கிய புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் தலா இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்த்துப் பிசையவும். எண்ணெயைக் காயவைத்து மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

**சிறப்பு**

நீரிழிவாளர்களுக்கு உகந்த உணவான காராமணியில் எண்ணற்ற சத்துகள் அடங்கியுள்ளன. இது உடலின் சோர்வினைப் போக்கி நல்ல தூக்கம் ஏற்பட வழிவகை செய்யும். உணவைக் குறைத்து சக்தியையும் இழக்காமல் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் இந்த காராமணியை வடையை எடுத்துக்கொள்ளலாம்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share