சமூக கட்டமைப்புகளில் இருந்து வெளியே வந்து அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியாற்றி சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து துறைகளிலும் பெண் அதிகாரிகளே கோலோச்சுகின்றனர்.
தமிழகத்தில், காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, கரூர், தருமபுரி ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். இது வழக்கமான நடவடிக்கை என்றாலும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுமுக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேசமயத்தில் இந்த பணியிடமாற்ற நடவடிக்கையின் மூலம், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பெண்களின் ஆளுமைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
காஞ்சி மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மாவட்டத்தின் தலைமை பணிகள் பெண் ஆளுமைகளின் கீழ் வந்துள்ளது.
காஞ்சிபுரம் ஆட்சியர்: மகேஸ்வரி ரவிக்குமார்
வடக்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் : சாமூண்டிஸ்வரி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்: சண்முகபிரியா
மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்: அனுராதா
மாவட்ட சமூக நல அலுவலர் : சங்கீதா
மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் : தனலட்சுமி
மாவட்ட ஊட்டச்சத்து நல அலுவலர் : சற்குனா
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் : ஜீவா
ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் : திவ்ய ஸ்ரீ
காஞ்சிக் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் :மணிமேகலை
காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் : மகேஸ்வரி
காஞ்சிபுரம் வட்டாட்சியர் :பவானி
வாலாஜாபாத் வட்டாட்சியர் : மித்ரா தேவி
ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் நிர்மலா
மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் ( பொது) : கியூரி
ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
ஒரு மாவட்டத்தின் உயர் அதிகாரிகள் பலரும் பெண் ஆளுமைகளாக இருப்பது மற்ற பெண்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
**-பிரியா**�,