bரிலாக்ஸ் டைம்: கம்பு குழிப்பணியாரம்!

Published On:

| By Balaji

அரிசி, உளுந்து மாவுடன் காரம் மற்றும் இனிப்பு என இரு வகையான குழிப்பணியாரங்கள் செய்யப்படுவது போல் கம்பு மாவும் சேர்த்து சத்தான குழிப்பணியாரம் செய்யலாம். இது சுவையான நொறுக்குத்தீனி என்பதால், குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

**எப்படிச் செய்வது?**

அரிசி, கம்பு, உளுந்து மூன்றும் கலந்த ஒரு கப் கலவையுடன் ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊறவைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இதை ஆறு முதல் எட்டு மணி நேரம் புளிக்கவிடவும். ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் தலா ஒரு டீஸ்பூன் கடுகு, கடலைப்பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்து மாவில் கலக்கவும். இதில், பொடியாக நறுக்கிய ஒரு கையளவு சின்ன வெங்காயம், சிறிதளவு கொத்தமல்லித்தழை, நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள், கால் கப் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரச் சட்டியில் ஊற்றி, எண்ணெய்விட்டு இரண்டு முறை திருப்பிப் போட்டு, முறுகலானதும் எடுக்கவும். தேங்காய் சட்னி அல்லது பொடியுடன் சேர்த்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும்.

**சிறப்பு**

இரும்புச்சத்து நிறைந்தது. பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர, மாதவிலக்குப் பிரச்சினைகள் நீங்கும்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share