மறைந்த இந்திய நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு குறித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புத்தகத்தின் முன்னுரையை நடிகை கஜோல் எழுதியுள்ளார்.
*ஸ்ரீதேவி: தி எடர்னல் ஸ்கிரீன் தேவி* என்ற புத்தகத்தை எழுத்தாளரும், திரைக்கதை ஆசிரியருமான சத்யார்த் நாயக் எழுதியுள்ளார். இதற்கான அனுமதியை தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரிடம் பெற்ற பின்பே எழுதியிருக்கிறார் சத்யார்த். பாலிவுட் நாயகி கஜோல் இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள ஸ்ரீதேவியின் ரசிகர்கள் இந்த புத்தகத்தை விரும்புவார்கள் என்று கஜோல் கூறியுள்ளார். மேலும், இது குழந்தை நட்சத்திரமாக இருந்து இப்போது வரை அழியாத புகழுடன் இருக்கும் ஸ்ரீதேவியின் ஐம்பது ஆண்டு கால பயணத்தை எழுத்தாக கொண்டு வந்திருக்கிறது என்கிறார் கஜோல்.
கஜோல் இது குறித்து மேலும் கூறுகையில், “நான் ஸ்ரீதேவியின் படங்களையும், அவரது ஸ்கிரீன் – மேஜிக்கையும் பார்த்து தான் வளர்ந்தேன். எப்போதும் நான் அவரது ரசிகை” என நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.
இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுத கஜோல் தான் சரியான தேர்வு என்று எழுத்தாளர் நாயக் கூறினார். நாயக் கூறும்போது, “கஜோல், சினிமாவின் குழந்தை. 80 மற்றும் 90 களில் ஸ்ரீதேவியின் பெருமையைப் பற்றிய முதல் அனுபவத்தைப் பெற்றவர். மிகச்சிறந்த கலைஞர்களில் ஒருவரான கஜோல், பல ஆண்டுகளாக ஸ்ரீதேவியை மிகவும் கவனித்து பின்பற்றி வருகிறார். இதெல்லாம் அவரது முன்னுரையில் அழகாக பிரதிபலித்திருக்கிறது. இது உண்மையிலேயே இதயப்பூர்வமான ஒரு பங்களிப்பு. ஸ்ரீதேவியின் புகழ்பெற்ற ஒளிவீச்சினால் ஈர்க்கப்பட்ட ஒரு தலைமுறை நடிகைகளின் அடையாளமாக கஜோலின் முன்னுரை வந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார் எழுத்தாளர் நாயக்.
�,”