தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆதரவு வரும் மக்களவைத் தேர்தலில் யாருக்கு என்பதை முடிவு செய்ய நேற்று (மார்ச் 10) கடலூர் மாவட்டம் வடலூரில் அக்கட்சியின் பொதுக்குழு கூடியது. இதில் கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கலந்துகொள்ளவில்லை.
உடல் நலம் சரியில்லை என்று கூறி சில நிமிடங்கள் அலைபேசி வழியாக பேசிய வேல்முருகன், ‘அனைவரும் உழைத்து கட்சி எடுக்கும் முடிவை செயலாக்குவோம்’ என்று கேட்டுக்கொண்டார்.
வேல்முருகன் திமுகவை ஆதரிப்பாரா, அமமுகவை ஆதரிப்பாரா என்ற கேள்விக்கு பொதுக்குழுவில் பதில் கிடைக்கும் என்றால் அங்கே, “அனைத்துப் பிரச்சனைகளுக்காகவும் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் சமரசமற்றுப் போராடிவருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. தொடர்ந்து அந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவும் அது சார்ந்து மற்றும் வருகிற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்தும் முடிவெடுக்கவும் அந்த முடிவை அமல்படுத்தவும் நிறுவனத் தலைவருக்கு முழு உரிமையும் அதிகாரமும் வழங்குகிறது மாநில சிறப்பு பொதுக்குழு’ என்ற தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது.
வேல்முருகன் உடல் நலம் சரியில்லாமல் சென்னையில் தனியார் மருத்துவமனையில் இருக்கிறார் என்கிறார்கள் அவரது கட்சி வட்டாரத்தில். அதனால் வேல்முருகன் ஆதரவு யாருக்கு என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது.�,