இந்தியாவின் அமைப்பு சார்ந்த துறைகளில் மார்ச் மாதத்தில் மொத்தம் 11.38 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு அறிக்கை கூறுகிறது.
அமைப்பு சார்ந்த துறைகளில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களைத் தொழிலாளர் காப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் மாதத்தில் மட்டும் 11.38 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய பிப்ரவரி மாதத்தில் 11.02 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டிருந்தன. அதேபோல, 2018-19 நிதியாண்டு முழுவதும் மொத்தம் 1.48 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
முன்னதாக தொழிலாளர் சேமலாப நிதிய அமைப்பு வெளியிட்டிருந்த அறிக்கையில், மார்ச் மாதத்தில் 8.14 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய பிப்ரவரி மாதத்தில் இதன் எண்ணிக்கை 7.88 லட்சமாக மட்டுமே இருந்தது. 2018-19 நிதியாண்டில் மொத்தம் 67.59 லட்சம் பேர் புதிதாகத் தொழிலாளர் சேமலாப நிதியத் திட்டத்தில் இணைந்திருந்தனர்.
தொழிலாளர் காப்பீட்டு நிறுவனம், தொழிலாளர் சேமலாப நிதிய அமைப்பு மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை & மேம்பாட்டு ஆணையம் ஆகிய அமைப்புகள் வேலை உருவாக்கம் தொடர்பான விவரங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/05/24/58)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
**
[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)
**
.
**
[பலித்தது மின்னம்பலம் – மக்கள் மனம் – ஒரு சோறு பதம்!](https://minnambalam.com/k/2019/05/24/31)
**
.
.
�,”