ஜூன் மாதம் மும்பை-கோவா இடையே தேஜஸ் சொகுசு ரயில் இயக்கப்படும் என இன்று (ஏப்ரல்,30) இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த புதிய ரயிலின் பெட்டிகள் தங்க நிறத்தில் இருக்கும். இருக்கைகள் நீல வானம் மற்றும் பூமியின் நிறத்திலும் இருக்கும். எல்இடி பதாகைகள், பயோ கழிப்பறைகள், தொடுதிறன் கொண்ட தண்ணீர் குழாய்கள், ஒவ்வொரு இருக்கையிலும் பொழுதுபோக்கு திரைகள், பார்வையற்றோருக்கான ஒருங்கிணைந்த பிரெய்லி திரைகள், வை-ஃபை வசதி, ரயில் சென்றடைந்த ரயில் நிலையத்தின் தகவலை அறிவிக்கும் டிஜிட்டல் பதாகைகள், தேநீர், காபி ஆகியவற்றுக்கான தானியங்கி இயந்திரங்கள்,இதழ்கள், சிற்றுண்டி மேஜைகள், கண்காணிப்பு கேமராக்கள், புகை பிடிப்பதை கண்டறியும் கருவி மற்றும் தானியங்கி கதவுகள் உட்பட 22 வகையான புதிய வசதிகள் இடம் பெறும் என ரயில்வே மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். தேஜஸ் ரயிலுக்கான அதிநவீன சொகுசு பெட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆர்சிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது.
மும்பை- கோவா இடையே அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், டெல்லி-சண்டிகர் வழியாக தேஜஸ் எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்படும். ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் உள்ளது போல டிக்கெட் கட்டணத்தின் ஒரு பகுதியாக கேட்டரிங் சேவை இருக்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது.�,