நடிகர் விஜய் சேதுபதி சமூகத்துக்கு உதவிகரமான எத்தனையோ செயல்களைச் செய்திருக்கிறார். அந்தப் பட்டியலில் சேர்க்கும் அளவுக்குத் தற்போது வெள்ளைப் புலி ஒன்றைத் தத்தெடுத்திருக்கிறார்.
உலகம் முழுவதிலுமே புலிகள் பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஐந்தாயிரத்துக்கும் குறைவான புலிகளே இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் கவலையில் இருக்கின்றனர். அதிலும் வெள்ளைப் புலிகளின் எண்ணிக்கை சில நூறுகளுக்குள்ளேயே இருக்கின்றன. இயற்கையின் உணவுச் சங்கிலியில் முக்கிய இடத்தில் இருக்கும் புலிகளைப் பாதுகாக்க நினைக்கும் பலரும், அவற்றைத் தத்தெடுத்து வருகின்றனர்.
அதன் வரிசையிலேயே, வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் வெள்ளைப் புலியை நடிகர் விஜய் சேதுபதி தத்தெடுத்திருக்கிறார். அந்தப் புலிக்கு ஆகக்கூடிய செலவுகள் அத்தனையையும் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டு **ஐந்து லட்சம் ரூபாய்** காசோலையை உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் கொடுத்திருக்கிறார்.
�,”