Kவட்டியைக் குறைத்த வங்கிகள்!
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி ஒருவருட கடனுக்கான வட்டியை 8.9 சதவிகிதத்திலிருந்து 8.15 சதவிகிதத்திற்கும், வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை 8.65 சதவிகிதம் வரை குறைக்க முடிவெடுத்துள்ளது. இந்த வட்டி விகிதக் குறைப்பு ஜனவரி 7ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஹெச்.டி.எஃப்.சி. வங்கி அறிவித்துள்ளது.
கனரா வங்கியும் ‘குறு செலவு கடன் விகிதம்’ (MCLR)-ஐ 9.15 சதவிகிதத்திலிருந்து 8.45 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. வட்டி விகிதத்தை குறைப்பதை தொடர்ந்து டெபாசிட்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று கனரா வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகள் அல்லாத வீட்டு கடன் வழங்கும் டி.ஹெச்.எஃப்.எல். நிறுவனமானது வீட்டு கடன்களுக்கான வட்டியை 5௦ புள்ளிகள் அதாவது 9.1௦ சதவிகிதத்திலிருந்து 8.60 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. இது ஜனவரி 4ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதேபோல, கடந்த செவ்வாய் கிழமையன்று இந்தியா புல்ஸ் வீட்டு நிதி நிறுவனமும் வீட்டு கடனுக்கான வட்டியை பெண்களுக்கு 8.65 சதவிகிதமாகவும், மற்றவர்களுக்கு 8.7 சதவிகிதமாகவும் குறைத்தது.�,