தமிழில் நடிகையாகப் பெரிதாக ஜொலிக்க முடியாமல் கிளாமர் நடிகையாக வலம் வருபவர் ராய் லக்ஷ்மி. முழுக்க முழுக்க கிளாமராக ஜூலி 2 படத்தில் நடித்திருக்கிறார். இந்தி, தமிழ்,தெலுங்கு, மலையாளம் என நான்கு மொழிகளிலும் வெளியாகும் அதன் தமிழ் ட்ரெய்லர் நேற்று (செப்டம்பர் 18) வெளியானது. ட்ரெய்லரில் அவருடைய கிளாமர் பரபரப்பை ஏற்படுத்துகிறது என்றால், கிரிக்கெட் வீரர் தோனியை ‘யார் அவர்?’ எனக் கேட்ட அவருடைய பேச்சு அதைவிடவும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
2008இல் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் விளம்பரத் தூதராக இருந்தவர் ராய் லக்ஷ்மி, அப்போது இவருக்கும் தோனிக்கும் இடையேயான நட்பு பற்றி செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்நிலையில் சமீபத்தில் ஊடகங்களுக்கு அவர் பேட்டியளித்தபோது தோனியின் பெயர் குறிப்பிடப்பட்டது. உடனே அதற்கு ராய் லஷ்மி, ‘யார் அவர்?’என்று கேட்டு மிரட்சி உண்டு பண்ணினார்.
மேலும், விளக்கம் கூறிய அவர், **தோனி திருமணமாகி குடும்ப வாழ்க்கையைத் தனது குழந்தையுடன் மகிழ்ச்சியாக நடத்திவருகிறார். இதுபோன்று தொடர்புபடுத்திப் பேசும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். தோனிக்கும் எனக்கும் திருமணம் என்று முன்பு செய்திகள் பரப்பப்பட்டன. அது இருவருக்குமிடையேயான உறவை தர்மசங்கடத்துக்குள் தள்ளியது. தோனி மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. இனி அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிடுங்கள்”** என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ரசிகர்களும் ராய் லக்ஷ்மியும் பெரிதும் எதிர்பார்க்கும் ஜூலி 2 திரைப்படம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
[ஜூலி 2 தமிழ் ட்ரெய்லர்](https://youtu.be/E6zjfQrUPVk)�,”