மும்பையில் பரேல் பகுதியில் உள்ள கிறிஸ்டல் டவர் என்ற 17 மாடிக் கட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 22) காலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில், 4 பேர் உயிரிழந்தனர்.
மும்பை பரேல் பகுதியில் ஹின்ட்மதா திரையரங்கம் அருகே உள்ள கிரிஸ்டல் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை பெரும் தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 14 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அடுக்குமாடிக் குடியிருப்பின் 12ஆவது மாடி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைதொடர்ந்து, அடுக்குமாடிக் குடியிருப்பிற்குள் சிக்கியவர்களைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் 20 பேர் சேர்க்கப்பட்டனர். அவர்களில் மூதாட்டி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
மருத்துவமனையில் மூவர் அறுவை சிகிச்சை பிரிவிலும், 11 பேர் அவசரச் சிகிச்சை பிரிவிலும் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.�,