kமுந்தானை முடிச்சு பாசறை: அப்டேட் குமாரு

public

சர்கார் படத்துக்கு யார் கதை எழுதுனாங்கன்னு பத்து நாளா போன பஞ்சாயத்து ஒரு முடிவுக்கு வந்துருச்சு. இந்த தமிழ்நாட்டு சர்காருக்கு யாரு கதை, வசனம் எழுதுறாங்கங்குற பஞ்சாயத்து மட்டும் இரண்டு வருசமா போய்கிட்டு இருக்குது, அதை மட்டும் ஓப்பனா அறிவிக்க மாட்டிக்காங்க. சரி அரசியல் பிரச்சினை நமக்கு எதுக்கு இந்த பக்கமாவே போவோம். ‘டிவிட்டை காப்பி பண்ணி தன்னோட பேஜ்ல பேஸ்ட் பண்ணி லைக் வாங்கிட்டு இருக்கவங்களையே இங்க ஓட ஓட விரட்டிகிட்டு இருக்காங்க. கூலா கதையை எடுத்துட்டு இவ்வளவு பிலிம் காட்டுறீங்களே’ன்னு டிவிட் போடுறாங்க. என்னப்பா எல்லாம் பாக்யராஜ் போட்டோவை புரொபைல் பிக்சரா வச்சுருக்காங்க, அவருக்கு இவ்வளவு ரசிகர்கள் பட்டாளமான்னு விசாரிச்சேன். அப்ப தான் தெரியுது. பசங்க எல்லாம் எதிர் பார்ட்டியை சேர்ந்தவங்களாம். இன்னைக்கு ஒரு நாளைக்கு தன்னோட ‘தல’யில பாக்யராஜ் போட்டோவை மாட்டி அவர் ஃபேன்ஸ் ஆகிட்டாங்களாம். முந்தானை முடிச்சு பாசறைன்னு அமைப்பு தொடங்க போறாங்களாம். அப்டேட்டை பாருங்க. அமைப்பு கொடியில முருங்கைக்காய் இருக்கான்னு பார்த்துட்டு வாரேன்.

**@Thaadikkaran**

செல்வின்னு பேரு வச்சிருக்குற பொண்ணுகூட சிவகுமார் அய்யா பக்கத்துல போக பயப்படும்னு நினைக்குறேன்..!

**@Anandh_offl**

மனைவி அடிக்கும் போது ஒரு கணவன் சிரிக்கிறான் என்றால் அவன் தெய்வீக நிலை அடைந்திருப்பான் .

**@Kozhiyaar**

கருத்து சொல்வதற்கு அல்ல, கடந்து செல்வதற்கே அதிக ஞானம் தேவைப்படுகிறது!!!

**@itz_Prathap**

தீபாவளி பண்டிகைக்கு எக்ஸ்ட்ரா ஒரு நாள் லீவு விட்டது உன் சந்தோசத்திற்கு இல்லை… ஒயின்_ஷாப்_வருமானத்திற்கு

**@parveenyunus**

மனகசப்பு காரணமாக பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவுக்கு திரும்ப வேண்டும்- ஓபிஎஸ் #

சும்மா வந்தா போதுமா..தியானம் செஞ்சுட்டு வரணுமா..?

**@Kozhiyaar**

பஸ்ல ஹெட்போன் போட்டுட்டு தள்ளி உட்கார சொன்னதை கவனிக்காத இளைஞனைப் பார்த்து ஒரு பாட்டி ‘பாவம் அந்த பையனுக்கு செவிட்டு மெஷின் வெச்சும் காது கேட்கலை போல’ன்னு அடுத்த ஸீட்டுக்கு போய்ட்டாங்க!!!

**@HAJAMYDEENNKS**

சர்கார் படக்கதை பிரச்சனையில் சமரசம் – பட டைட்டிலில் நன்றி தெரிவிக்க ஒப்புக்கொண்ட முருகதாஸ் – செய்தி #

இதை அப்பவே செஞ்சிருக்கலாமே! எதுக்கு பர்னிச்சரை எல்லாம் உடைச்சுக்கிட்டு ?

**@Fazil_Amf**

கேரள மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் – ஹெச்.ராஜா.

தலைவரே, கேரள கண்ணூர்ல, ஐந்து ஓட்டு பாஜக வாங்குனத மறந்துட்டு பேசுறீங்க- அட்மின் !!

**@shivaas_twitz**

கூட்டநெரிசல் மிகுந்த ஜவுளிக்கடையில், கொஞ்சம் இளைப்பாற இடம் கிடைப்பது ஆண்கள் பிரிவுகளில் மட்டுமே..!

**@Kozhiyaar**

சிரமப்பட்டு யோசித்து அவன் பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொன்னா, ‘போடா லூசு மாதிரி பேசாத’ன்னு என்று கூறுபவருக்கு உயிர் நண்பன் என்று பெயர்!!!

**@amuduarattai**

செய்தி: பாஜகவுடன் கூட்டணி வைக்க யாரையும் கெஞ்ச மாட்டோம். -பொன்.ராதாகிருஷ்ணன்

சிபிஐ விட்டு ரெய்டு மட்டும் தான் பண்ணுவோம்.

**@Thaadikkaran**

நமக்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கையில் நம்மோடு இருப்பவர்களே சிவக்குமாரை போல வாய்ப்புகளை தட்டிவிடுவதில் குறியாய் இருக்கிறார்கள்..!

**@oorkkavalaan**

அண்ணே நா புதுசா ஆரம்பிச்ச மளிக கடைக்கு முருகன் படம் மாட்டவா?,பிள்ளையார் படம் மாட்டவா?

எந்த படம் வேணுமுனாலும் மாட்டு ஆனா “கலப்படம்” பண்ணி மட்டும் மாட்டிக்காத…

**@kumarfaculty**

கேரள மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் – ஹெச்.ராஜா

பாகம் எல்லாம் பிரிச்சாச்சு போல.ஓ! தமிழ்நாடு தமிழிசை அக்காவுக்கா?

**@sultan_Twitz**

உடல் பருமனை குறைக்க யோகாவில் ஆர்வம் காட்டுங்கள் – பன்வாரிலால் புரோகித் #

எதுக்கு அடுத்தவன் செல்போனை தட்டிவிட்டு போறதுக்கா..?!

**@mathimaran**

கள்ள ஓட்டுப் போடறத கண்டுபுடுச்சி, அப்டியே முதலமைச்சர் ஆகுறது தான் மேட்ரு.

ஆனா, அதுக்கு முன்னே அது ஒரு ‘கள்ளக் கதை’ ங்கறத கண்டுபுடிச்சிட்டாய்ங்களே!

**@Kozhiyaar**

அந்த காலத்தில மளிகை கடைக்கு போனால் கொசுறா கிடைக்கும் கருவேப்பிலை கொத்தமல்லி போலத் தான் இந்த காலத்தில ஷாப்பிங் போனா கணவனுக்கும் குழந்தைக்களுக்குமான உடைகள்!!!

**@ajmalnks**

தினகரனை அதிமுகவில் சேர்க்கமாட்டோம்-ஜெயக்குமார்.

உங்களை வீட்டில் சேர்த்துக்கிட்டாங்களா அமைச்சரே…

**@gips_twitz**

சொந்தமா படம் எடுக்கனும்னா செல்பி தான் எடுக்கனும் – தோழர் முருகதாசு

-லாக் ஆஃப்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *