kமுகத்தை தானமாகப் பெற்ற அமெரிக்க இளைஞர்!

public

உடல் உறுப்புகளை தானமாக இறந்தவர்களிடம் பெறுவதுபோல, முகத்தையும் தானமாகப் பெற்று முக உறுப்புகளை எடுத்து வேண்டியவர்களுக்குப் பொருத்தி அறுவை சிகிச்சை செய்யும் நடைமுறை அமெரிக்காவில் வெற்றிகரமாக நடைபெற்றுவருகிறது. இந்தியாவில் சிதைவடைந்த நிலையில் முகம் உள்ளவர்களுக்கு முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சைகள் நடந்துவந்தாலும் ஓரளவுக்குத்தான் இழந்த முகத்தை திரும்பக் கொண்டுவர முடியும். அந்தளவுக்குத்தான் வசதிகள் உள்ளன. ஆனால் முகத்தில் உள்ள உறுப்புகளை இன்னொருவருக்கு மாற்றி அறுவை சிகிச்சை செய்து அவரது பழைய அழகான முகத்தைக் கொண்டுவந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவில் மின்னெகோட்டா மாகாணத்தில் உள்ள வுயோமிங் நகரைச் சேர்ந்த 31 வயது இளைஞர் ஆன்டி கான்ட்னெஸ். கடந்த 2006ஆம் ஆண்டு இவர் பலமுறை துப்பாக்கியால் முகத்தில் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவர் மரணம் அடையவில்லை. முகம் சிதைந்தது. அதனுடன் மனம் வெறுத்தநிலையில் வாழ்ந்து வந்தார். பின்னர் டாக்டரிடம் ஆலோசனை பெற்றார். அப்போது மற்ற உறுப்பு போன்று முகத்தையும் தானம் பெற்று மாற்று ஆபரேசன்மூலம் சீரமைக்கலாம் எனத் தெரிவித்தனர். அதற்காக அவர் காத்திருந்தார். இந்த நிலையில், மின்னெகோட்டாவைச் சேர்ந்த காலன் ரோஸ் என்பவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மனைவி லில்லியின் அனுமதி பெற்று அவரது முகம் தானமாக பெறப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ரோஸ் என்பவரின் முகத்திலிருந்து மூக்கு, தாடைகள், வாய், உதடுகள், நாடி, மற்றும் பற்கள் ஆபரேசன் மூலம் அகற்றி ஆன்டிகான்ட்னெஸ்க்கு பொருத்தப்பட்டது. இந்த ஆபரேசன் மின்னெகோட்டா மாகாணத்தில் ரோஸ்செய்டர் நகரில் உள்ள மாபேயி கிளினிக்கில் நடைபெற்றது. இந்த ஆபரேசனை முகச் சீரமைப்பு சிறப்பு நிபுணர் டாக்டர் சமீர் மார்தானி நடத்தினார். ஆபரேசன் முடிந்து 3 வாரங்கள் கழித்து கண்ணாடியில் சான்ட்னெஸ் தனது முகத்தைப் பார்த்தார். அப்போது, தனது முகம் முழுவதும் அழகாக மாறியிருப்பதைப் பார்த்து அதிசயித்தார். முக மாற்று ஆபரேசனை 60 பேர் கொண்ட மருத்துவக் குழு நடத்தியது. மொத்தம் 56 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்காக டாக்டர்களுக்கு சான்ட்னெஸ் பாராட்டுத் தெரிவித்தார். கணவர் ரோசின் முகத்தை தனக்கு தானமாக அளித்த அவரது மனைவி லில்லிக்கும் நன்றி கூறினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *