kமாவட்ட முதல்வராகிய நான்: அப்டேட் குமாரு

public

90 ஜோடிகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லிட்டு போன முதல்வர், கல்யாணம் பண்ணி வைச்ச கையோட கறி சோறை மட்டும் சாப்பிட்டு பேசாம வந்திருக்கலாம். அதைவிட்டுட்டு, “இந்தியாவுலேயே அதிகமாக போராட்டம் பண்ணுற மாவட்டம் தமிழ்நாடுதான்”னு மாத்திச் சொல்ல, திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்குனு வந்துச்சாம் அதிர்ஷ்டம்ங்கிற மாதிரி கண்டெண்ட் பஞ்சத்துல இருந்த நெட்டிசன்ஸ் கபால்ன்னு இந்த மேட்ர புடிச்சிக்கிடாங்க. அவங்களுக்கு இப்போ மூணு நாளா மூணு வேளை சாப்பாடே இந்த மேட்டர் தான்.

அதுவும், தமிழ்நாட்டை தனி மாநிலமா ஆக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்த க்ரூப்பெல்லாம், ஓவர் நைட்டுல தமிழ்நாட்டையே மாவட்டமாக ஆக்கிட்டாரேனு சொல்லிட்டுத் திரியுறாங்க. சோசியல் மீடியாவுல திரும்புற பக்கமெல்லாம் இப்ப இதான் மெட்டீரியல். சரி நீங்க அப்டேட்டைப் பாருங்க… அடுத்து எதுவும் சிக்குதான்னு பார்த்துட்டு வாரேன்.

**@Vivika Suresh**

வெளிநாட்ல வேலை செய்றவன்லாம் சீக்கிரமா கடனை அடைக்கட்டும்னு ரூபாய் மதிப்ப குறைச்ச மோடிய நினச்சு…

கண்ணுல தண்ணி வச்சுன்டேன்

**@Boopathi Venkat**

தனக்கு அடிக்கடி உதவி செய்யறவங்ககிட்டயே ‘நான் யார் உதவியையும் எதிர்பார்த்து வாழல’னு சொல்றது எல்லாம் மெகா காமெடி!

**@Sangeetha RG**

தண்ணிய சிக்கனமா செலவு செய்யனும்னு பக்குவமா குழாயை திருகி ஒரு லெவலுக்கு கொண்டு வரதுக்குள்ளயே சேமிக்க நினைச்ச தண்ணீர் செலவாயிடுது

**@Kamali Panneerselvam**

நேசித்தலுக்கும் வெறுத்தலுக்கும் இடையே ஊடாடும் பேரன்பை புறந்தள்ளுவது அவ்வளவு எளிதில் கை கூடுவதில்லை

அது அப்படி தான்

*Abubacker Sithick**

*இன்னும் 10 நிமிசத்துல வந்துருவேண்டா

*வாங்குன விலைக்கே வித்துட்டு போறேன்

*வீட்டுகிட்ட வந்துட்டேன்மா

*கண்டிப்பா M3 பேப்பர் பாஸ் பண்ணிடுவேன்

*என்கிட்ட போனே இல்ல

*அஸ் அயம் சபரிங் ப்ரம் பீவர்

*நான்லாம் அந்த காலத்துல…

*என்னலாம் கைட் பண்ண ஆளில்ல.. இருந்தா பெரிய ஆளாகிருப்பேன்

*பைக் இருக்கு மச்சான் ஆனா பெட்ரோல் இல்ல

*இன்னைக்கி தான் வந்துச்சு ப்ரஷ்

*வாடையே ஆகாதுங்க

சில_பொய்கள்

**@Jayanthi Saradha**

நீ சொல்றதை நா கேட்க மாட்டேன், நா சொல்றதை நீ கேட்க மாட்ட

இப்படியே போகுது இத்துப்போன வாழ்க்கை.

**@Namchi Mohan**

மோவ்…காபில சக்கர இல்ல

மூடினு குடிடா தண்ட சோறு

நமக்கு சுகர் வரகூடாதுனு சக்கரை போடாம காபி குடுத்திறுக்காங்க அம்மானா சும்மா இல்ல டா

**Lakshmi Saravanakumar**

நீங்கள் கேட்க விரும்பும் உண்மைகளுக்கும் நான் சொல்ல விரும்பும் உண்மைகளுக்கும் இடையிலான தூரத்தை வேறு வழியில்லை சின்னஞ் சிறு பொய்களால் தான் கடந்து செல்ல முடியும்.

**@மகுடீசுவரன். மு**

காதோரம் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்த பாடலை ம்யூட் செய்தேன் உதட்டில் வந்து உட்கார்ந்துகொண்டது.

**@Kaadhal Sugumar**

One Minute Please..

காதல் திருமணங்கள் பெரும்பாலும் புட்டுக்கொள்வதற்கு காரணம்,

லவ் பண்றப்போ ரெண்டு பர்போக்கிகளும் ஒருத்தருக்கு ஒருத்தர் என்னென்ன கலர் பிடிக்கும்,டிரஸ் பிடிக்கும்,இசை பிடிக்கும்னு போட்டி போட்டு தெரிஞ்சிக்குவாங்களே தவிர,

அவங்கவங்க வீட்டுல இருக்க அம்மா அப்பா,அண்ணா அக்கா தங்கச்சி,தம்பி இவங்களோட குணாதிசயம் என்ன.,எப்படிப்பட்டவங்கன்னு கேட்டுத் தெரிஞ்சிக்காம சுயநலத்தோடப் பழகிப்பாங்க.

கல்யாணம் முடிஞ்ச கையோட நினைச்சதுக்கெல்லாம் நேர் மாறா புது சூழலில் வீட்டிலுள்ளவர்கள் எல்லாம் நடக்கிறப்போதான்.,’அவங்க இப்டி நடந்துக்கிறாங்க இப்டி இருக்காங்கன்னு’ குண்டு வெடிக்கத் தொடங்கும்.

அதுக்குப் பழகும்போதே எங்க வீட்ல இப்டித்தான் இருப்பாங்கன்னு தெளிவா சொல்லியிருந்தா “நான்தான் அப்பவே சொன்னேன்ல அப்டீன்னு புரிய வைக்கலாம்.

மனதளவில் தயாரா இருந்தாத்தான் பக்குவம் வரும்.

**@Jayanthi Saradha**

பிரிய ஏதோ ஒரு காரணம் கிடைக்கும் போது, திரும்ப பேசவும் ஏதோ ஒரு காரணம் கிடைச்சிடும் நமக்கானவர்களிடம்.

**@mohanramko**

‘வெயிட்’ போட வச்சி

சர்க்கரை நோயையும் தருகிறது

குக்கர்

**@ameerfaj**

தமிழகத்தின் தேர்தலுக்காக பாஜக தயாராகி வருகிறது !!

-முரளிதர_ராவ்

“நோட்டா’வை எப்படி வீழ்த்துவது என்று ஆலோசிப்பதாக தகவல்”

**@madurai_jinna**

காட்சிகளை கொடுத்து

கண்களை கெடுத்து விட்டது

கணினி…

**@BlackLightOfl**

தமிழகத்தின் தேர்தலுக்காக பாஜக தயாராகி வருகிறது – முரளிதர ராவ்

எலெட்ரிக் ஓட்டிங் மிஷின் ரெடி பண்ணுறதை சொல்லுறாரோ..??

**@Kozhiyaar**

மனைவி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சமாளிப்பவன் புத்திசாலி!!

வாங்கி கொடுக்கிறேன்னு சொல்லியே சமாளிப்பவன் தான் திறமைசாலி!!!

-லாக் ஆஃப்�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *