ரபேல் நடால், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
பாரிஸில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகள் நேற்று (ஜூன் 7) நடைபெற்றன. முதல் அரையிறுதியில் இரண்டாம் நிலை வீரரான ரோஜர் பெடரரும், மூன்றாம் நிலை வீரரான ரபேல் நடாலும் மோதினர்.
கடந்த முறை பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ரபேல் நடால் முதல் செட்டை 6-3 எனவும், 2ஆவது செட்டை 6-4 எனவும், 3ஆவது செட்டை 6-2 எனவும் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். பெடரருக்கு 11 ஆண்டுகளில் இல்லாத மோசமான ஒரு கிராண்ட் ஸ்லாம் தோல்வி இதுவாகும்.
மேட்ரிடில் 2009ஆம் ஆண்டு களிமண் தரையில் நடாலை வென்ற பிறகு அவரை வீழ்த்த தொடர்ந்து போராடி வருகிறார் ரோஜர் பெடரர். 6வது முறையாக தொடர்ச்சியாக பாரிஸ் களிமண் தரையில் நடால் பெடரரைத் தோற்கடித்துள்ளார்.
இறுதிப் போட்டியில் ஜோகோவிக் அல்லது ஆஸ்திரேலிய வீரர் டொமினிக் தியம் ஆகிய இருவரில் ஒருவரை நடால் நாளை (ஜூன் 9) எதிர்கொள்வார். இந்த கிராண்ட் ஸ்லாமை வென்றால் நடால் 12வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்று சாதனை படைப்பார்.
**
மேலும் படிக்க
**
**
[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)
**
**
[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)
**
**
[டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!](https://minnambalam.com/k/2019/06/07/83)
**
**
[12ஆம் வகுப்புப் பாடத்தில் இடம்பெற்ற சிவாஜி](https://minnambalam.com/k/2019/06/07/16)
**
**
[மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!](https://minnambalam.com/k/2019/06/07/53)
**
�,”