kபிரதமரிடம் வைகோ முன்வைத்த 3 கோரிக்கைகள்

Published On:

| By Balaji

பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் வைகோ இன்று சந்தித்துப் பேசினார்.

மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25ஆம் தேதி பதவியேற்க உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதற்காக நேற்று டெல்லி சென்றார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்திற்குச் சென்ற அவர், அங்கிருந்த தலைவர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தினார். வைகோவை கடுமையாக எதிர்க்கும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவரை வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

இந்தச் சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (ஜூலை 23) மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார் வைகோ. பிரதமருக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் வைகோ, அவரை சந்தித்தது முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது அரசையும் நான் கடுமையாக விமர்சித்து வருபவன். ஆனாலும் அவரை சந்தித்த போது என்னை அன்போடு வரவேற்றார். இது எனக்கு மகிழ்ச்சியான ஒன்று. மோடி என்னிடம் நீங்கள் உணர்ச்சிவசப்படக் கூடிய நபராக இருக்கிறீர்கள். ஆனாலும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறினார். அதற்கு நான் கொண்ட கொள்கையின் அடிப்படையில் இவ்வாறு செயல்படுவதாக தெரிவித்தேன்” என்று கூறினார்.

பிரதமரிடம் 3 வி‌ஷயங்களை நான் எடுத்து கூறினேன் என்று குறிப்பிட்ட வைகோ, “நில ஆர்ஜித சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு, ஆந்திராவில் 20 அப்பாவி தமிழர்களை போலி என்கவுண்டர் மூலம் கொன்ற விவகாரம், நதிகள் இணைப்பால் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினைக்கான தீர்வு போன்ற விவகாரங்கள் பற்றி அவரிடம் பேசினேன். அதுமட்டுமல்லாமல் தமிழீழ பிரச்சினை பற்றியும் நாங்கள் பேசினோம். நான் யாழ்பாணம் சென்றது, ராஜபக்சே விவகாரம் போன்றவை பற்றியும் பேசினோம். இன்னும் சில வி‌ஷங்களை பற்றியும் விவாதித்தோம். ஆனால் அதைப்பற்றி இங்கு சொல்ல முடியாது. ஆனாலும் அவருடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமாக அமைந்தது” என்று அதனை விவரித்தார்.

**

மேலும் படிக்க

**

**[மின்னம்பலம் செய்தி: தங்கத்துக்கு போன் போட்ட ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/22/61)**

**[தளபதி உதயநிதி: தலைமை உத்தரவு!](https://minnambalam.com/k/2019/07/22/23)**

**[ ராமசாமிப் படையாச்சியார் படத் திறப்பு: ராமதாஸ் பங்கேற்காதது ஏன்?](https://minnambalam.com/k/2019/07/23/10)**

**[ஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி!](https://minnambalam.com/k/2019/07/21/40)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share