kபாஜக வேட்பாளருக்குப் பன்னீர் அணி ஆதரவு!

public

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பாஜக-வின் சார்பில் பீகார் முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக ஜூன் 19-ஆம் தேதி அறிவிக்கப்பட்டார். எனவே, வேட்பாளரை அறிவித்தது முதல் பாஜக அனைத்துக் கட்சியினரிடமும் ஆதரவைக் கேட்டுவருகிறது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களிடமும் தொடர்பு கொண்டு ஆதரவைக் கேட்டு வருகிறார். அதன்படி தமிழக முதல்வரிடமும் ஆதரவு கோரினார். இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாஜக-வின் வேட்பாளருக்குத் தனது [ஆதரவை]( https://www.minnambalam.com/k/2017/06/22/1498071953) ஜூன் 21-ஆம் தேதி தெரிவித்தார்.

இந்நிலையில், ஓ.பி.எஸ். தலைமையில் சென்னையில் அவரது இல்லத்தில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் ஜூன் 22-ஆம் தேதி(இன்று) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ ஜனாதிபதி வேட்பாளராக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட ராம் நாத் கோவிந்த்க்கு ஆதரவு தர வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா என்னிடம் கேட்டுக்கொண்டார். அதன் பின் தலைமைக் கழக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதனடிப்படையில், அமித் ஷா வேண்டுகோளை ஏற்று பாஜக வேட்பாளரை ஆதரிப்பது என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, [மின்னம்பலத்தில்]( https://www.minnambalam.com/k/2017/06/21/1498051520) ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதைப் போல், பாஜக வேட்பாளர் அறிவித்தவுடன் அதிமுக-வின் ஆதரவை பாஜக கோரியது. அதனடிப்படையில், மக்களவை துணை சபாநாயகர் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தார். அதன் பின் சசிகலாவின் ஒப்புதலையடுத்து, சட்டமன்ற கூட்டத்தொடருக்குப் பின், பன்னீர்செல்வம் அமைச்சர்களும் மற்றும் எடப்பாடி அமைச்சர்களும் தனியே சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தனர். அதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவின் வேட்பாளருக்கு ஆதரவை முதலிலும் அதைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் அணியினர் இரண்டாவதாகவும் தங்களது ஆதரவை அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *