kநல்லகண்ணுக்கு வாடகை இல்லா வீடு: ஓ.பி.எஸ்!

Published On:

| By Balaji

மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, மறைந்த முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான கக்கன் குடும்பத்தினர் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் தகவல் தவறானது, அவர்களுக்கு வாடகை இன்றி வீடு வழங்க அரசு தயாராக உள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இன்று (ஜூலை 18) சட்டமன்றத்தில் நேரமில்லா நேரத்தின் போது பேசிய நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வசித்து வந்த சிஐடி காலனி வீட்டில் இருந்து அவரை வெளியேற சொல்லியதாகவும், அப்படியானால் அவருக்கு மாற்று வீடு வழங்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ”நகர அபிவிருத்தி கழகத்தின் மூலம் 1953ஆம் ஆண்டில் வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான நிலத்தில் 119 வீடுகள் சிஐடி காலனியில் கட்டப்பட்டு, பொது மக்களுக்கு பொது ஒதுக்கீடு முறையில் மாத வாடகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மறைந்த அமைச்சர் கக்கனுக்கு 1971ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடு, அவரது மறைவுக்கு பிறகு 1987ஆம் ஆண்டு அவரது மனைவிக்கும் அவருக்குப் பிறகு அவரது மகன்கள் பெயரில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுபோன்று மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு 2007 ஆம் ஆண்டு மாத வாடகையில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2011ஆம் ஆண்டு பழைய குடியிருப்புகளை இடித்து விட்டு, புதிய கட்டிடங்களைக் கட்ட சிஐடி குடியிருப்புத்தாரர்களுக்கு தாக்கீது அனுப்பப்பட்டது, இதனை எதிர்த்து குடியிருப்பு வாசிகள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்

வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் அனைவரையும் காலிசெய்யுமாறு கூறிய நிலையில், 96 பேர் தாமாக முன்வந்து காலி செய்தனர் . அதே போல் நல்லகண்ணுவும் கடந்த மே 5ஆம் தேதி தாமாக முன்வந்து வீட்டை காலி செய்தார். கக்கன் குடும்பத்தினர் தொடர்ந்து அங்கேயே தான் வசித்து வருகின்றனர் . மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, அதிகாரிகள் மூலம் வீடு வழங்குவதாக தெரிவித்தேன். ஆனால் அவர் தாமாகவே வீடு பார்த்துக் கொள்வதாகத் தெரிவித்தார். கக்கன் குடும்பத்தினர் மற்றும் நல்லகண்ணு ஆகியோர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர் என்று கூறுவது முற்றிலும் தவறானது. அவர்களுக்கு மாத வாடகையின்றி வீடு வழங்க அரசு முன்வரும்” என்று தெரிவித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share