Kதோல்வியை ஆராயும் காங்கிரஸ்!

Published On:

| By Balaji

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 44 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் 2019 தேர்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் வந்தபின் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தோல்விக்குப் பொறுப்பேற்றுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “ராஜினாமா குறித்து காங்கிரஸ் செயற்குழு முடிவெடுக்கும்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று (மே 25) காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் கந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உ.பி கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஷீலா திக்‌ஷித், சித்தராமைய்யா, காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், ராஜஸ்தான், சத்திஸ்கர் மாநில முதல்வர்கள் உட்பட 52 முக்கிய நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

காங்கிரஸ் அடைந்த படுதோல்வி குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. ஏற்கெனவே ராகுல் காந்தி தனது ராஜினாமா கடிதத்தை சோனியா காந்தியிடம் கொடுத்ததாகவும், அதை சோனியா காந்தி ஏற்க மறுத்ததாகவும் காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது. இந்நிலையில், செயற்குழுக் கூட்டத்தில் தோல்விக்கு முழுப் பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் காந்தி முன்வந்ததாகவும், அவரது ராஜினாமாவைச் செயற்குழு உறுப்பினர்கள் ஏற்க மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

டெல்லி புறப்படுவதற்கு முன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காங்கிரஸ் தோல்வியடையவில்லை காங்கிரஸ்காரர்கள்தான் தோல்வியடைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளதே தவிர வீழ்ச்சி அல்ல. தனிமனித விமர்சனத்தை முன்வைத்தே மோடி பிரச்சாரம் செய்தார். இந்தியாவை வழிநடத்த ராகுலைத் தவிரச் சிறந்த தலைவர் யாருமில்லை. கோடிக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் ராகுலைத்தான் விரும்புகின்றனர்” என்று தெரிவித்தார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!](https://minnambalam.com/k/2019/05/24/93)

**

.

**

[ஓ.பன்னீரின் ‘பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/25/30)

**

.

**

[தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!](https://minnambalam.com/k/2019/05/25/20)

**

.

**

[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)

**

.

.

**

[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share