kதேவ் படக் குழுவின் வித்தியாச புரொமோஷன்!

Published On:

| By Balaji

தேவ் திரைப்படத்தைப் பிரபலப்படுத்த படக்குழு வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடித்த தேவ் திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது. அறிமுக இயக்குநர் ரஜத் ரவி சங்கர் இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இதனால் படக்குழு படத்தின் நீளத்தை 15 நிமிடங்கள் குறைத்தது.

தற்போது படத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த போட்டி ஒன்றை நடத்துகிறது. படத்தில் நாயகன் கார்த்தி சாகசங்கள் நிகழ்த்துவதில் தீராத வேட்கை கொண்டவர். பைக் ரேஸிலும் ஈடுபடுவார். மேலும் மும்பையிலிருந்து நாயகி ரகுலை பைக்கில் சென்னைக்கு அழைத்து வருவார். அந்தக் காட்சிகளில் பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் பைக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

தற்போது பார்வையாளர்களைத் திரையரங்கிற்கு அழைத்துவரும் முயற்சியில் இறங்கியுள்ள படக்குழு படம் குறித்துச் சில கேள்விகளை எழுப்பி அதற்கு சரியாக பதிலளிக்கும் இரு ரசிகர்களுக்கு பிஎம்டபுள்யூ பைக்குகளைப் பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

இது தேவ் திரைப்படம், பிஎம்டபுள்யூ நிறுவனம் இரு தரப்புக்கும் விளம்பரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share