kதிமுக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!

Published On:

| By Balaji

மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றிபெற்றது. மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றிய அக்கூட்டணி, சட்டமன்ற இடைத் தேர்தலில் 13 இடங்களில் வெற்றிபெற்றது. மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய அதிமுக, சட்டமன்ற இடைத் தேர்தலில் 9 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது.

இந்த சூழலில் புதிதாக வெற்றிபெற்றுள்ள திமுக எம்.எல்.ஏ.க்கள் 13 பேரும் நாளை (மே 28) பதவியேற்க உள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இவர்கள் பதவியேற்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

இதேபோல அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 9 எம்.எல்.ஏ.க்கள் வரும் 29ஆம் தேதி பதவியேற்க உள்ளனர். சபாநாயகர் அறையில் நடைபெறும் இந்த நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது. புதிதாக பொறுப்பேற்க உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் சபாநாயகர் தனபால் பதவியேற்பு பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைக்கவுள்ளார். இதனையடுத்து அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்களது வழக்கமான பணிகளை ஆரம்பிப்பர் என்று கூறப்படுகிறது.

**புதிதாக பொறுப்பேற்க உள்ள திமுக எம்.எல்.ஏ.க்கள் விவரம்**

ஆம்பூர்-வில்வநாதன், ஆண்டிப்பட்டி-மகாராஜன், அரவக்குறிச்சி-செந்தில் பாலாஜி, குடியாத்தம்-காத்தவராயன், ஓசூர்-சத்யா, ஓட்டப்பிடாரம்-சண்முகையா, பெரம்பூர்-ஆர்.டி்.சேகர், பெரியகுளம்-சரவணக்குமார், பூந்தமல்லி-கிருஷ்ணசாமி, தஞ்சாவூர்- நீலமேகம், திருப்பரங்குன்றம்-சரவணன், திருப்போரூர்-இதயவர்மன், திருவாரூர்-பூண்டி கலைவாணன்.

**அதிமுக எம்.எல்.ஏ.க்கள்**

அரூர்-சம்பத்குமார், மானாமதுரை-நாகராஜன், நிலக்கோட்டை-தேன்மொழி, பாப்பிரெட்டிப்பட்டி-கோவிந்தசாமி, பரமகுடி-சதன் பிரபாகர், சாத்தூர்-ராஜவர்மன், சோளிங்கர்-சம்பத், சூலூர்-கந்தசாமி, விளாத்திகுளம்-சின்னப்பன்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)

**

.

**

[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)

**

.

.

**

[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)

**

.

**

[திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!](https://minnambalam.com/k/2019/05/26/41)

**

.

.

**

[வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/05/26/35)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share