Kதள்ளிப்போன `பஞ்சுமிட்டாய்’!

public

`கிடாரி’ படத்தின் மூலம் கவனம்பெற்ற நிகிலா விமல், மா.கா.பா. ஆனந்துடன் ஜோடி சேர்ந்திருக்கும் `பஞ்சுமிட்டாய்’ படத்தின் வெளியீட்டை ஒத்தி வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமான மா.கா.பா. ஆனந்த், வானவராயன் வல்லவராயன், அட்டி, நவரச திலகம் போன்ற காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள காதல் படங்களிலே நடித்து வந்தார். அப்படங்கள் அவருக்கு போதிய கவனத்தைத் தரவில்லை. இருப்பினும் பாண்டியராஜன், சென்றாயன் போன்ற காமெடி பட்டாளங்களுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

முழுக்க பேன்டஸி காமெடி படமாக உருவாகியிருக்கும் இப்படத்தைப் பல குறும்படங்களை இயக்கிய எஸ்.பி.மோகன், இயக்குநர் ஷங்கர் பார்த்து பாராட்டிய ‘கலர்ஸ்’ குறும்படத்தை ‘பஞ்சுமிட்டாய்’ என்ற பெயரில் உருவாக்கியிருக்கிறார். கணவன் மனைவிக்கிடையே மற்றொரு நபர் குழப்பத்தை ஏற்படுத்துவதாய் அந்த குறும்படம் அமைந்தது. அந்த குறும்படத்தை மையமாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கின்றனர்.

டி.இமான் இசையமைப்பில் படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வரவேற்பைப் பெற்றது. படத்தை டிசம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். தற்போது போதுமான திரையரங்குகள் கிடைக்காத காரணத்தினால் தள்ளி வைத்துள்ளதாக படக் குழு அறிவித்திருப்பதுடன், வெகு விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *