தனுஷ் நடித்த ‘தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜெர்னி ஆப் ஃபக்கிர்’ என்ற பிரெஞ்ச்- ஆங்கிலத் திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்காக மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது.
இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்தப் படம், ரோமன் பியுர்டோலஸ் எழுதிய நாவலின் திரைவடிவமாகும். இந்தியாவிலிருந்து பாரிஸ் செல்லும் ஒரு தெரு வித்தைக்காரர் பற்றிய கதையான இப்படம் உலகம் முழுவதும் குடியேறியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசுகிறது. தெரு வித்தைக்காரராக தனுஷ் நடித்துள்ளார்.
ஐரோப்பாவில் வெளியான இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று, ரசிகர்களின் ஆதரவையும் பெற்று வருகிறது. சமீபத்தில் இத்திரைப்படம் ஸ்பெயின் நாட்டில் வெளியாகியது. ஸ்பெயின் ரசிகர்கள் தனுஷின் நடிப்பினால் ஈர்க்கப்பட்டு கொண்டாடி வரும் செய்தி ட்விட்டரில் வைரலானது.
இந்த நிலையில், பக்கிரி என்ற தலைப்பில் தமிழில் வெளிவரவிருக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டூடியோஸ் வெளியிடவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனர் சஷிகாந்த் “ ஏற்கனவே சர்வதேச அங்கீகாரம் பெற்ற இப்படம், தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும். தனுஷின் ரசிகர்கள் இதற்கு முன் தனுஷைப் பார்த்திராத அசாதாரண அவதாரத்தில் பார்க்கவுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்கையை தேடி நானும் போறேன் என்ற வி.ஐ.பி பட பாடலின் முதல் வரியைத் தான் இப்படத்தின் தமிழ் தலைப்பாக முதலில் வைக்க திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமித் திரிவேதி இசையமைத்த பாடலுக்கு, மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
.
�,”