kடிஎன்பிஎல்: திண்டுக்கல் அசத்தல் வெற்றி!

Published On:

| By Balaji

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடர் ஜூலை 19ஆம் தேதி தொடங்கியுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நேற்று ரவிச்சந்திரன் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதின. திண்டுக்கல் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. அதன்படி முதலில் விளையாடிய திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. மூன்றாவது வீரராகக் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஷ்வின் அதிகபட்சமாக 37 ரன்கள் (19 பந்து) எடுத்தார். சேப்பாக்கம் அணி தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய அலெக்ஸாண்டர் 11 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

116 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கவுசிக் காந்தியும், கங்கா ஸ்ரீதரும் டக் அவுட் ஆகி வெளியேறினர். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்கத் திண்டுக்கல் அணி எளிதாக வெற்றி பெற்றது. சேப்பாக்கம் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 105 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியின் பந்துவீச்சாளரான முருகன் அஷ்வின் அடித்த 16 ரன்களே அணி வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன்னாகும். திண்டுக்கல் அணி தரப்பில் சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட் வீழ்த்திய சிலம்பரசனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 4 ஓவர் வீசிய ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை.

இன்றைய ஆட்டத்தில் காரைக்குடி காளை அணியும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மதியம் 3.15 மணிக்கு மோதுகின்றன. இரவு 7.15க்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் டூட்டி பேட்ரியாஸ் அணியும் காஞ்சி வீரன்ஸ் அணியும் விளையாடுகின்றன.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**

**[BIG BOSS 3: ஸ்மோக்கிங் ரூம் பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/38)**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share