தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 நான்கு மணி நேரத்தில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் அதிகபட்சமாக 5 செ.மீ. மழையும், கோவை மாவட்டம் சின்னகல்லாறு, பேச்சிப்பாறை, தக்கலை, பெருஞ்சாணி உள்ளிட்ட பகுதிகளில் 4 செ.மீ. மழையும் பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தொடர்மழையால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இரவு நேரத்தில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,
kசென்னையில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு!
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel