99 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை(ஆகஸ்ட்-21) ஏற்படும் சூரிய கிரகணத்தை நேரடியாக ஒளிபரப்ப நாசா ஏற்பாடு செய்து வருகிறது.
அமாவாசை நாளன்று சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அப்போது சூரியனின் முழுப் பகுதியோ (முழு சூரிய கிரகணம்) அல்லது ஒரு பகுதியோ (பகுதி சூரிய கிரகணம்) மறைந்து காணப்படும். நாளை வரும் சூரிய கிரகணத்தை ‘கங்கண கிரகணம்’ அல்லது ‘வளையக் கிரகணம்’ என அழைக்கப்படுகிறது. சூரியனைச் சந்திரன் 2 நிமிடங்கள் 40 விநாடிகளுக்கு மேல் வரை முழுமையாக மறைத்துக் காணப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவின் 14 மகாணங்களில் தெரியும் என்றும் அமெரிக்காவில் முழுப் பகலும் இரவாகக் காட்சியளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணத்தின் நிழலானது ஓரிகன் மாநிலத்தில் இருந்து தெற்கு கரோலினா மாநிலத்தை நோக்கி மணிக்கு சுமார் 2400 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சூரிய கிரகணம், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பகுதியாக காணப்படும். இதனை பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்காமல் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட சூரிய கண்ணாடிகள் வழியாகத் தான் பார்க்க வேண்டும் என்று நாசா அறிவுறுத்தியுள்ளது.
இந்த நாளில் மேகங்கள் சூரியனை மறைத்துக் கொள்வதால் கிரகணத்தைப் பார்க்க சிரமம் ஏற்படும். எனவே மக்கள் அனைவரும் நேரலையாக ஆன்லைனில் எளிதாகப் பார்க்கும் வகையில் நாசா நடவடிக்கை எடுத்து வருகிறது. அதாவது 80 ஆயிரம் அடி உயரத்தில், கேமரா பொருத்தப்பட்ட 50 பலூன்களை நாசா விஞ்ஞானிகள் பறக்கவிட்டுள்ளனர். முதல் முறையாக இந்தக் காட்சி ஆன்லைனில் நேரலையாக ஒளிபரப்பாக இருக்கிறது
கடந்த 1955 ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் நாளைச் சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. மேலும் அடுத்த கிரகணம் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி ஏற்படவுள்ளது சந்திர கிரகணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி ஏற்படவுள்ளது. இவை இந்தியாவில் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,