Kசிம்புவின் ‘விரல் புரட்சி’?

Published On:

| By Balaji

சிம்பு நடிக்கும் படம் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் படத்தில் கடைசியாக நடித்திருந்த சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகிய இருவரும் இதில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் யோகி பாபு, மஹத் உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் இதைத் தயாரிக்கிறது. சுந்தர்.சியால் கோலிவுட்டில் அறிமுகமான ஹிப் ஹாப் ஆதியே இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. அதாவது இந்தப்படத்தின் தலைப்பு தீபாவளியன்று வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் ‘வி’எனும் எழுத்தில் இந்தத் தலைப்பு தொடங்கவிருப்பதாகவும் சிம்புவுக்கு சினிமாவில் மிகத் தொடர்புடைய தலைப்பாக இது இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சிம்புவைப் பொறுத்தவரை அவரது ட்ரேடு மார்க் முத்திரையென்பது விரலைக் கட்டம் கட்டிக் காட்டுவது. நான் விரலாட்டுறவன் இல்ல விரலை விட்டு ஆட்டுறவன்” என பஞ்ச் பேசுவதிலிருந்து “நான் ஒத்தை விரல் காட்டுனா ஒண்ணாகும் கூட்டம்தான்” என ஓப்பனிங் சாங் பாடுவது வரை என நகமும் சதையும்போல சிம்புவும் விரலும் இருந்துவருவதால் இந்தப் படத்திற்கு ‘விரல் வித்தை’ என்றோ, ‘விரல்’ என்றோ பெயர் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

விரல் என வைத்தால் அதை ஆங்கிலத்தில் எழுதும்போது viral என மாறும். எனவே படத்திற்கு சமூக வலைதளங்களில் இது கூடுதல் புரோமோஷனாகவும் அமைய வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. இவை மட்டுமல்லாது செக்கச்சிவந்த வானத்தில் பிரபலமான வசனமான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ எனும் பெயரும் இந்த லிஸ்ட்டில் உள்ளது. மேலும் கோலிவுட்டில் வில்லங்கமான சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் சிம்பு. ‘வி’ எனக் கூறியிருப்பதால் ‘வில்லங்கம்’ என்றுகூட இதற்குப் பெயர் வைக்கப்படலாம் யாருக்குத் தெரியும் எனவும் கூற ஆரம்பித்துள்ளனர் சிலர்.

எது எப்படியோ , தீபாவளியன்று சர்கார் ரிசல்ட்டோடு சேர்த்து சிம்பு பட டைட்டில் என்னவென்பதும் தெரிந்துவிடும்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share